தேனியில் தொடர் கனமழை; சுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு - பயணிகள் குளிக்கத் தடை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த மாதம் 3 ஆம் தேதி முதல் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்று முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடைவித்தனர். இந்நிலையில் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்காணல் மற்றும் வெள்ளகெவி பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .
குளிக்கத் தடை:
மேலும் 43 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 16ஆம் தேதி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் தேவதானப்பட்டி வனத்துறை அதிகாரி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்தனர் இந்நிலையில் நேற்று மாலை முதல் கனமழை காரணமாக மீண்டும் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணத்தால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை தேவதானப்பட்டி வனச்சராக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Petrol Diesel Price Today: சென்னையில் இன்றைய நாளில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதுதான்!
வெள்ளப்பெருக்கு:
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆன்மீக ஸ்தலமாகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்கும் சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுருளி அருவிக்கு நீர் வரத்து வரும் இரவங்கலாறு , மகாராஜா மெட்டு , மேகமலை வனப்பகுதிகளுக்குள்ளும் நேற்று மதியம் முதல் பெய்த கன மழை எதிரொலி காரணமாக அருவியில் இன்று அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவியின் 30 அடி உயரத்திற்கு மேலாக கொட்டும் வெள்ள நீரால அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் படிகளில் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக அருவிக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.