மேலும் அறிய
Advertisement
மதுரை மாநகராட்சியில் அடுத்தடுத்து பணியிடம் மாற்றப்படும் ஆணையாளர்கள் ; சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிருப்தி
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு அரசின் திட்டப்பணிகள் முறையாக செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சியில் அடுத்தடுத்து பணியிடம் மாற்றப்படும் ஆணையாளர்கள் 3 வருடத்தில் 6 ஆணையாளர்கள். அரசியல் அழுத்தத்தால் பணிபுரிய முடியாத மாநகராட்சியாக மாறுகிறதா மதுரை மாநகராட்சி ஆணையாளர்கள் மாற்றத்தால் தொடரும் நிர்வாக குழப்பம் : சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அதிருப்தி.
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த விஷாகன் திண்டுக்கல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு சில மாதங்களிலயே ஆகாத நிலையில், அவர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சிம்ரன் ஜித் சிங் நியமிக்கப்பட்டார். இவரும் சில மாதங்களில் மாற்றப்பட்டு, மீண்டும் மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக கே.ஜே. பிரவீன் குமார் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் மதுரை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்ட கே ஜே பிரவீன் குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் எல். மதுபாலன் புதிய மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து கடந்த 7 மாதமாக சிறப்பாக பணிபுரிந்து ஆணையாளர் மதுபாலன் அதிகாரிகளின் ஆலோசனையை பெற்று மாநகராட்சி திட்டங்களை செயல்படுத்திவந்தார். நிலுவையில் இருந்த புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளை தொடங்கினார். இவர் அவ்வப்போது அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென ஆலோசனை கூட்டம் நடத்துவார். மேலும் மாநகராட்சி அரசு ஒப்பந்த பணிகளின்போது அரசியல் அழுத்தமின்றி பணியாற்ற வேண்டும், எந்தவித அதிகாரத்தில் உள்ளவர்கள் கமிஷன் கேட்டு மிரட்டினால் பணம் கொடுக்க கூடாது எனவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் சில மாதங்களில் ஆணையாளர் மதுபாலனும் தூத்துக்குடிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி மேயர் தேர்வு தொடங்கி தி.மு.க., அமைச்சர்கள் இடையே மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நிலவும் கோஷ்டி பூசல்காரணமாக மாநகராட்சியில் முறையாக நிர்வாகம் செய்ய முடியாத அளவிற்கு மூன்று ஆண்டுகளில் ஆறு ஆணையாளர்கள் மாற்றப்பட்ட சம்பவம் என்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபோன்ற அடிக்கடி ஆணையாளர்களை மாற்றப்படுவதால் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு அரசின் திட்டப்பணிகள் முறையாக செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Zak Crawley: 10 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை மட்டுமே.. இந்திய மண்ணில் ஜாக் கிராலி தனித்துவ சாதனை படைப்பு!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ind vs Eng 2nd Test: இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion