மேலும் அறிய

வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் SOPNGE CITY CONSTRUCTION முறையை உருவாக்க கோரிய வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம்

’’சீனா போன்ற நாடுகளில் sponge city rainwater system எனும் பெயரில் மழை நீரை முறையாக சேமிப்பது அதற்கான வடிகால் திட்டத்தை முறையாக அமைப்பது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன'’

மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் மொத்தம் 39 ஆயிரன் நீர் நிலைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 50 % நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல நீர்வழிப் பாதைகள், வாய்க்கால்கள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு மேல் சென்று அப்பகுதி மக்கள் குடிநீருக்கே சிரமப்படும் சூழ்நிலைக்கு, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரிக்காததே காரணம். நீர்நிலைகளில் மண் மற்றும் குப்பை கழிவுகள் சேருவதன் காரணமாகவே பெருவெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 
தமிழகத்தில் பெரும்பாலான கண்மாய்கள் முறையாக சர்வே செய்யப்படதில்லை. இதனால் கண்மாய்களின் எல்லைகள், ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகியதாக மாறிக்கொண்டே வருகின்றன. அரசும் நீர்நிலைகளில் ஏராளமான கட்டிடங்களை கட்டி உள்ளது. இதன் காரணமாகவே மழை காலங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பது, நீர்நிலைகளில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி அவற்றை தூர்வாரி பராமரிப்பது போன்றவையே வெள்ள பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க தீர்வாக அமையும். ஆனால் அரசு அதற்கான முறையான நடவடிக்கை எதையும் முன்னெடுக்கவில்லை. 
 

வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் SOPNGE CITY CONSTRUCTION முறையை உருவாக்க கோரிய வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம்
 
உலக வெப்பமயமாதலால் ஏராளமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் தண்ணீரை பாதுகாப்பதும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் அரசின் கடமை. சீனா போன்ற நாடுகளில் sponge city rainwater system எனும் பெயரில் மழை நீரை முறையாக சேமிப்பது அதற்கான வடிகால் திட்டத்தை முறையாக அமைப்பது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன.
 
இந்த திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  ஆகவே, அதிக வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் sponge city construction முறையை அமல்படுத்தவும், 1950ஆம் ஆண்டு அரசு ஆவணத்தின் அடிப்படையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளில் பட்டா வழங்கிய அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது.  அப்போது மத்திய அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 
சிறைக்கைதி உயிரிழந்ததை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கு - தென்மண்டல ஐஜி பதில் தர உத்தரவு 
 
ராமநாதபுரம் மாவட்டம் ஆனையூரைச் சேர்ந்த தாமரைச்செல்வி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,"எனது கணவர் முனியாண்டி துபாயில் பணியாற்றி வந்தார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பினார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி எனது கணவரை நெடுங்குளம் காவல்துறையினர் கைது செய்த நிலையில் என்னிடம் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மார்ச் 18ஆம் தேதி காவல் நிலையத்திற்கு சென்றோம். எனது கணவரின் சகோதரர் காவல்நிலையம் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு எனது கணவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்ததோடு, காவல் நிலைய சிறை அறைக்குள் தலைகீழாக தொங்கவிடப்பட்டுள்ளார்.
 
கமுதி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட போது காவல் துறையினர் தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும், உணவு உண்ணவும், தண்ணீர் குடிக்கவும் தன்னால் இயலவில்லை என என்னிடம் குறிப்பிட்டார். இந்த வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவரை கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  நெஞ்சுவலி காரணமாக அனுமதித்திருப்பதாக செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினமே 7 மணி அளவில் அவர் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
என் கணவர் மீது வேண்டுமென்றே போலியாக வழக்குப்பதிவு செய்து, அவரை கடுமையாக தாக்கியதன் காரணமாகவே உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளார். ஆகவே, எனது கணவரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றவும், இதற்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  வழக்கு தொடர்பாக தென் மண்டல காவல்துறைத் தலைவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget