மேலும் அறிய

முதல்வர் ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என ராகுல் காந்தி கேட்கலாமே? - செல்லுர் ராஜூ

பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே?, என மதுரையில் செல்லுர் ராஜூ பேட்டி 

திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறுவதற்கு பதிலாக கள்ளச்சாராய ஆட்சி, போதை பொருள் ஆட்சி என கூறலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
 
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் நேரில் செல்லவில்லை
 
மதுரை பரவை பகுதிக்கு உட்பட்ட ஊர்மெச்சிக்குளத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...," அ.தி.மு.க., 10 ஆண்டுகால ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறவில்லை. கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி தரவில்லை. கள்ளச்சாராய மரணங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முழு பொறுப்பு. கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் நேரில் செல்லவில்லை, கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விதி எண் 56 படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் விதி எண் 56 படி இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசி உள்ளார். சட்டம், விதிமுறைகள் அனைவருக்கும் சமம் தானே, அப்புறம் எப்படி முதலமைச்சர் சட்டப்பேரவையில் முதல்வர் பேசியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார், கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மடியில் கனமில்லை என்றால் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யலாமே. சட்டப்பேரவை கண்ணியத்தை காக்கும் விதமாக கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து வெளியேறினோம், நாங்கள் எங்களுடைய சட்டைகளை கிழித்துக்கொண்டு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறவில்லையே?, அரசு விற்பனை செய்யும் மதுபானத்தில் கிக்கு இல்லையே என அமைச்சர் துரைமுருகன் பேசியது அமைச்சருக்கு அழகில்லை.
 
பிரதமர், முதல்வர் கள்ளக்குறிச்சி செல்லவில்லை
 
திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என கூறுவதற்கு பதிலாக கள்ளச்சாராய ஆட்சி, போதை பொருள் ஆட்சி என கூறலாம். அரசு மதுபானங்கள் கொள்முதலில் வெளிப்படை தன்மைகளுடன் நடந்து கொள்ளவில்லை என தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எப்படி கெஜ்ரிவால் சிறையில் உள்ளாரோ அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுபான கொள்முதல் ஊழலில் சிறைக்கு செல்வார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக முதல்வர் உட்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுப்போம். பிரதமர் மோடி மணிப்பூருக்க ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே?, 16 பேர் உயிரிழந்துள்ளதால் சம்பவ இடத்திற்கு பிரதமர் நேரில் வர வேண்டுமென விதி உள்ளது. கள்ளக்குறிச்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்திருக்க வேண்டும்.
 
பண்புடன் பேச அண்ணாமலை கற்றுவரவேண்டும்
 
நல்ல தலைவர்கள் இல்லை என விஜய் சொன்னதன் அர்த்தம் வேறு, மாணவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அப்படி சொல்லியுள்ளார், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா?, சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும். திமுக ஆட்சியில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் போதைக்கு அடிமையாகி விட்டார்கள். திமுக ஆட்சியில் சட்டங்கள் எழுத்துக்களாகவே மட்டும் உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் சென்று கல்வி கற்க உள்ளதற்கு என்னுடைய வாழ்த்துக்கள், அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று தமிழகத்திற்கு வர வேண்டும். தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் அண்ணாமலை கற்று வரவேண்டும்" என கூறினார்
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget