மேலும் அறிய
Advertisement
'இந்தியை வளர்க்க சினிமா கலைஞர்களை கையில் எடுக்கும் பாஜக' - இயக்குநர் அமீர் குற்றச்சாட்டு !
சினிமா கலைஞர்களை வைத்து இந்தியை வளர்க்க பா.ஜ.க., நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, என மதுரையில் இயக்குநர் அமீர் பேட்டியளித்துள்ளார்.
மதுரையில் சினிமா இயக்குநர் அமீர் பத்திரிக்கையாளார் சந்தித்து பேசுகையில், "தமிழ்நாடு மக்கள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசியலால் மக்கள் பிரிந்து உள்ளனர்.
#madurai பாஜக சினிமா கலைஞர்களை வைத்து இந்தியை வளர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என மதுரையில் இயக்குனர் அமீர் பேட்டி Further reports to follow - @abpnadu #ameer | #Madurai | @beemji | #hindi | #Tamil | | #issues | #bjp | #dmk | #admk | #director | @arrahman | #RamadanMubarak pic.twitter.com/tdoXxclDTC
— Arunchinna (@iamarunchinna) May 3, 2022
நாட்டை விட்டு வெளியேற தயார், எது நாடு, யார் யார் இன மக்கள் என சொல்ல வேண்டும், ஹிந்தியை திணிப்பவர்கள் என் தேசத்தை விட்டு வெளியேற வேண்டும், தமிழ்நாடு மிக ஆழமாக ஆரியம் காலூன்றி வருகிறது. திரைக்கலைஞர்களை திரையில் மட்டுமே ரசிக்க வேண்டும். இந்தி பேச வேண்டும் என சொல்வது தான் பாசிசம். கலைக்கு மொழி கிடையாது. தமிழ் கலைஞர்கள் வெளி மாநிலங்களில் தமிழ் குறித்து பேசுவதில்லை. சினிமா வாய்ப்பு பறிபோகும் நிலை வரும் என அச்சம் ஏற்படுகிறது. தமிழ் கலைஞர்களில் உச்சத்தில் உள்ள சிலர் சுய லாபத்துக்காக சுய நலத்துடன் நடந்து கொலைகாரர்கள். மண்னுக்காக, மக்களுக்காக சில நடிகர்கள் போராடி வருகிறார்கள்.
மேலும் செய்திகள் படிக்க -Hippocratic Oath: தமிழ்நாட்டில் ஹிப்போகிரட்டிக் உறுதிமொழி மட்டுமே ஏற்க வேண்டும் - மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவிப்பு
சினிமா வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது என பேசுவதில்லை. மொழி, இனம் தொடர்பாக வெறி இருக்க கூடாது, மொழி, இனப்பற்று இருக்க வேண்டும், தமிழ் மக்களை தமிழ் இசையோடு இணைத்து வைத்தவர் இளையராஜா, ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஏ.ஆர்.ரகுமானை கொண்டாடியது. இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் புகழ்பெற்றதால் அவர் மும்பையில் விரட்டப்பட்டார். பாஜக சினிமா கலைஞர்களை வைத்து இந்தியை வளர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, சமஸ்கிருதம் பயின்றால்தான் மருத்துவம் பயில முடியும் என்ற நிலையை உடைத்தது சமூக நீதி கட்சிகள், மீண்டும் அந்த நிலையை புகுத்த நினைக்கிறார்கள், என் மொழியின் மீது மற்றொரு மொழியை திணித்தால் மொழிக்காக களத்தில் நின்று சண்டையிடுவது அவசியமாக உள்ளது" என கூறினார்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Adinam ’எனக்கு ரொம்ப வருத்தம்; என்னை வேண்டுமானால் சுடட்டும்’ - கொந்தளித்த மதுரை ஆதினம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஆன்மிகம்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion