குழந்தை விற்பனை வழக்கு: காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணிக்கு ஜாமீன்!
மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த காப்பகத்தில் ஒருங்கிணைப்பாளர் கலைவாணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
இரக்கமே இல்லாத 'இதயம் டிரஸ்ட்' மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த சம்பவம் சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனநலம் குன்றிய இளம் பெண்ணின், ஆண் குழந்தையை ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, குழந்தை கொரோனாவால் இறந்ததாக கூறி சினிமா லெவலுக்கு நாடகமாடியது அம்பலமானது. இது தொடர்பான விசாரணையில் கர்நாடகாவை சேர்ந்த மற்றொரு குழந்தையும் மீட்கப்பட்டது. மேலூரை சேர்ந்த ஐஸ்வர்யாவின் குழந்தை கொரோனாவால் இறந்தாக போலியான ஆவணங்கள் தயார் செய்ய உதவிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுருந்தார். மேலும் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுதும் இருக்கும் காப்பகங்களில் ஆய்வு நடத்தக்கூறி சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
மதுரை இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருந்தது, அதுதொடர்பான விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது காப்பகத்தில் ஒருங்கிணைப்பாளர் கலைவாணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.