மேலும் அறிய

Ayudha Pooja 2023: மதுரையில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயுத பூஜை கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்

பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் சிறப்பாக ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாரிகளும் இணைந்து தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆட்டம், பாட்டத்துடன் கவலை மறந்து ஆயுத பூஜையை கொண்டாடி வருகின்றனர்.
 
ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி
 
நவராத்திரி நிறைவு விழாவாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விழா என்பது தமிழ்நாட்டில் மிக முக்கிய விழாக்களின் ஒன்றாக கருதப்படுகிறது. பல்வேறு இடங்களில் சாதி, மதம் பார்க்காமல் ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தாங்கள் செய்கின்ற தொழிலுக்கு மரியாதை செய்யும் விழாவாக இது பார்க்கப்படுவதால், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதேபோன்று ஆயுத பூஜை விழாவின் பொழுது நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிறுவனம் சார்பில், இனிப்புகள் வெகுமதிகள் உள்ளிட்டவை வழங்குவது வழக்கமாக உள்ளது. இதேபோன்று அரசு அலுவலகங்கள் அரசு சார்ந்த இடங்களில் கூட, ஆயுதபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆட்டம், பாட்டத்துடன் கவலை மறந்து  ஆயுத பூஜையை கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்வு மதுரையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மதுரை தூய்மை பணியாளர்கள் உற்சாகம்
 
மதுரை ஆனையூர்  பேருந்து நிலையத்தில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆயுத பூஜையை முன்னிட்டு  கொண்டாடி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கும், உபகரணங்களுக்கும் பூஜை செய்தும் சிறப்பாக வழிபாடு நடத்திவருகின்றனர். தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வாகனங்களை தங்களது சொந்த வண்டிகள் போல பராமரித்து வாழைக்கொத்து மாலை அணிவித்து ஜோடித்து கொண்டாடிவருகின்றனர். தங்களது வாழ்நாளில் ஆயுதப்பூஜையை தீபாவளி போல கொண்டாடுவோம் என உற்சாகமாக தெரிவித்தனர். தூய்மை பணியாளர்கள் பல்வேறு சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர். தங்களது கவலைகள் மறந்து தூய்மை பணியாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Ayudha Pooja 2023: மதுரையில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயுத பூஜை கொண்டாடிய தூய்மை பணியாளர்கள்
 
காஞ்சிபுரத்தில் அறுசுவை அசைவ உணவு
 
அதே போல்  காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 4வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோருக்கு மண்டல குழு தலைவர் ஏற்பாட்டில் அறுசுவை அசைவ உணவுகளும் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மண்டல குழு தலைவருக்கு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
 
தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு.
 
 

இது போன்று பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் சிறப்பாக ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாரிகளும் இணைந்து தூய்மை பணியாளர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள் படிக்க - Ayudha Pooja 2023: தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு..சாப்பிட்ட இலையை எடுத்த மண்டல குழு தலைவர் - காஞ்சியில் நெகிழ்ச்சி

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NIA Arrest : ‘ஹோட்டல் ஊழியர் போல பதுங்கியிருந்த பயங்கரவாதி?’ தேனியில் அதிரடி கைது..!

 

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget