மேலும் அறிய
விவசாயத்திற்கு அரசின் இலவச மின் இணைப்பு வழங்க 30 ஆயிரம் லஞ்சம்- உதவி மின் பொறியாளரை கைது
பலரிடம் லஞ்சம் பெற்றுவிட்டு தற்போது வரை மின் இணைப்பு வழங்கவில்லை என பொதுமக்களும் அடுத்தடுத்து வந்து புகார் அளித்ததால் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
![விவசாயத்திற்கு அரசின் இலவச மின் இணைப்பு வழங்க 30 ஆயிரம் லஞ்சம்- உதவி மின் பொறியாளரை கைது Assistant electrical engineer arrested for accepting Rs 30,000 bribe to provide free electricity to agriculture விவசாயத்திற்கு அரசின் இலவச மின் இணைப்பு வழங்க 30 ஆயிரம் லஞ்சம்- உதவி மின் பொறியாளரை கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/7833c5d8b1a35e093e18ef7eced6201f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கைது_செய்யப்பட்ட்ட_பொறியாளர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் உப மின் நிலையத்திற்குட்பட்ட ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார்., இவர் தனது விவசாய தொட்டத்திற்கு மின் இணைப்பு பெற 2010ஆம் ஆண்டு விருப்பமனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த மனுவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்க உத்தரவு கிடைத்த நிலையில் சிறிது காலத்திலேயே இலவச மின் இணைப்பாக வழங்க அரசு உத்தரவு பிறப்பித்தது.
![விவசாயத்திற்கு அரசின் இலவச மின் இணைப்பு வழங்க 30 ஆயிரம் லஞ்சம்- உதவி மின் பொறியாளரை கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/43fa28209a67903f55bfc812c6070141_original.jpg)
இந்த இலவச மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி தொடர்ந்து உத்தப்பநாயக்கணூர் உப மின் நிலையத்திற்கு வந்த சசிக்குமார் -இடம் ரூபாய் 40,000 லஞ்சமாக உதவி மின் பொறியாளர் சக்திவேல் கேட்டுள்ளார்., இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாருக்கு தகவல் அளித்த சசிக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி இன்று ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை உதவி பொறியாளர் சக்திவேல் -இடம் வழங்கிய போது மறைந்திருந்த மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்தியசீலன், காவல் ஆய்வாளர் குமரகுரு தலைமையிலான போலீசார் கையும் களவுமாக சக்திவேல் - யை கைது செய்தனர்.
![விவசாயத்திற்கு அரசின் இலவச மின் இணைப்பு வழங்க 30 ஆயிரம் லஞ்சம்- உதவி மின் பொறியாளரை கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/7833c5d8b1a35e093e18ef7eced6201f_original.jpg)
தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக உதவி மின் பொறியாளர் சக்திவேல் - இடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கிராமத்தில் பலரிடம் லஞ்சம் பெற்றுவிட்டு தற்போது வரை மின் இணைப்பு வழங்கவில்லை என பொதுமக்களும் அடுத்தடுத்து வந்து புகார் அளித்ததால் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.#Abpandu | மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விவசாயத்திற்கு அரசின் இலவச மின் இணைப்பு வழங்க 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளரை கைது செய்து 4 மணி நேரத்திற்கும் மேலாக - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். pic.twitter.com/UaiS70hZ67
— Arunchinna (@iamarunchinna) April 2, 2022
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் - கே. பாலகிருஷ்ணன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
வணிகம்
இந்தியா
தேர்தல் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion