கோடைகாலம் நெருங்கும் நிலையில் தேனி மாவட்ட அணைகளில் குறையும் நீர் மட்டம்!
முல்லை பெரியாறு அணையில் 118.15 அடியாகவும் , வைகை அணையில் 53.67 அடியாகவும் நீர் மட்டம் உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் மதுரை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணைக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், வருசநாடு, வெள்ளிமலை, கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர்வரத்தாக உள்ளது.
இதே போன்று தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத சூழல் உள்ளது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 118.30 அடியாக இருந்தது.
நீர்வரத்து வினாடிக்கு 107கன அடியாக காணப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் 118.15 அடியாக உள்ளது. நிர் வரத்து இன்றி காணப்படுகிறது. வினாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. முல்லை பெரியாறு அணை மற்றும் வைகை அணை பகுதிகளில் தொடர்ந்து நீர் வரத்து குறைந்துள்ளதாலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின்மையாலும் அணைகளில் நீர் இருப்பும் குறைந்துகொண்டே வருவதால் கோடைகாலம் நெறுங்கும் நிலையில் விவசாய தேவைகளுக்கும் குடி நீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளின் இன்றைய நிலவரப்படி நீர் நிலவரம்
Today's
27.10.2022
Dam level data:
1) Vaigaidam -
Level- 53.67 (71)feet
Capacity:2511 Mcft
Inflow: 105 cusec
Outflow : 72cusec
2)Periyardam: 118.15 (142)feet
Capacity:2294 Mcft
Inflow: 0 cusec
Outflow: 300cusec
3) Manjalar
Level- 39(57) feet
Capacity:172.75 Mcft
Inflow: 4 cusec
Outflow: 55 cusec
4)Sothuparai dam
Level- 27.55 (126.28)feet
Capacity: 18.79 Mcft
Inflow: 0 cusec
Outflow: 0 cusec
5)Sanmuganathi dam
Level-27.40 (52.55)feet
Capacity:18.79 Mcft
Inflow : 0 cusec
Outflow: 0 cusec.