![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
’காவிரி பிரச்சினையில் காங்கிரஸை பார்த்து நடுங்கும் திமுக’- சாட்டை துரைமுருகன் பேட்டி!
”ஜல்லிக்கட்டு உரிமைக்கு எந்த மதுரையில் இருந்து போரட்டத்தை முன்னெடுத்தோமோ அதே மதுரையில் இருந்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என எச்சரித்தார்
![’காவிரி பிரச்சினையில் காங்கிரஸை பார்த்து நடுங்கும் திமுக’- சாட்டை துரைமுருகன் பேட்டி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/30/e69aed703e1fb060798adfac99911d121696073895537184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்னை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தி வருகிறது.
தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கர்நாடக மாநிலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கர்நாடகாவில் கன்னட விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைத் திறந்துவிடக் கூடாது என போராட்டம் நடத்தின
முதல்வர் ஸ்டாலின் அவர்களை அவமதிப்பது தி.மு.க.விற்கு வலிக்கிறதோ இல்லையோ எங்களுக்கு வலிக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல் மதுரையில் இருந்து காவிரிக்கு வெற்றி காணுவோம்" - என சாட்டை துரைமுருகன் மதுரையில்பேட்டி@SRajaJourno #NTKfightsforCauvery @SeemanOfficial @NTKLiveNews pic.twitter.com/czAWA3nd3Q
— arunchinna (@arunreporter92) September 30, 2023
பெங்களூருவில் ஏற்கனவே நடைபெற்ற பந்த் போராட்டத்தின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து இழிவான செயல்களை கன்னட அமைப்புகள் செய்தன. இதற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி நீரை திறந்துவிடக் கோரி மதுரை கே.புதூர் பேருந்துநிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் சாட்டை துரை முருகன் தலைமை வகித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)