திண்டுக்கல்லில் தொழிற்பழகுநர் முகாம்: வேலைவாய்ப்பு & உதவித்தொகை! இளைஞர்களே, மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் (PMNAM) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்.
வேலைவாய்ப்பு என்பது இன்றைய இளைஞர்களின் முதன்மை தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. திறன் மேம்பாட்டின் மூலம் தொழில்துறை அனுபவம் பெறும் வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு திட்டங்கள் அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான தொழிற்பழகுநர் திட்டம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் அனுபவத்தையும் வழங்குவதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தில் பல நகரங்களில் தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்கி வருகிறது. இதன்காரணமாக பல மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு முகாமிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பயிற்சி முகாம்
இத்தகைய சூழலில், திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 08.12.2025 (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் அவர்கள் தெரிவித்ததின்படி, அரசு மற்றும் தனியார் தொழிற்துறைகள் இதில் பங்கேற்று தொழிற்பழகுநர் பயிற்சிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளன. தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திரமாக ரூ.10,560 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
கல்வித்தகுதி
தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத ITI தேர்ச்சி பெற்றவர்கள், 8ம், 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட நாளில் நேரடியாக வருகை தரலாம். மேலும் விவரங்களுக்கு 0451-2970049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இளைஞர்கள் தங்களின் தொழில் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், வேலை அனுபவம் பெறவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஆர்வமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்ளலாம். மேலும் பல இளைஞர்கள் இந்த திட்டத்தின் பயனை அடைந்து முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.





















