மேலும் அறிய

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படத்தை சேர்க்கக் கோரி நீதிமன்றத்தில் முறையீடு

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் பெயரையும், புகைப்படத்தையும் சேர்க்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் பெயரையும், புகைப்படத்தையும் சேர்க்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிடப்பட்டது. வழக்காக தாக்கல் செய்யவும், மதியம் விசாரணைக்கு எடுப்பதாகவும் தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது

மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா தரப்பில் அவரது வழக்கறிஞர் சண்முகநாதன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி முன்னிலையில்," தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். ஆனால் அவை தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் பெயரும் புகைப்படமும் இடம் பெறவில்லை. ஆகவே, இது தொடர்பாக அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் பெயரையும், புகைப்படத்தையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்" என முறையிட்டார். இதனை ஏற்ற தலைமை நீதிபதியின் அமர்வு, வழக்காக தாக்கல் செய்யவும், மதியம் விசாரணைக்கு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மற்றொரு வழக்கு

பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பாஸ்போர் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக  மீண்டும் பேசிய பாஜகவின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுவது. அவர் ஜனநாயகத்தின் காவலர்(watch dog of democracy). அவர் இல்லையெனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்தார்.

சுரேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " 2013ஆம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது காவல்துறையினர் என் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர். நசுருதீன் என்பவர் மீதான வழக்கில் எனக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டு இதுபோல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நசுருதீன் என்பவர் எனது பயண ஏஜென்ட் மட்டுமே அவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆகவே எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுதாரர் மீது எவ்வித குற்றமும் இல்லை என ஒரு கியூ பிரிவு காவல்துறையினர் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. மனுதாரருக்கான நிவாரணம் வழங்கப்பட்டாலும், 2019ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சிலரும், இந்தியாவைச் சேர்ந்த சிலரும் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டுகள் பெற்ற வழக்கு தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டது. இது தொடர்பாக கியூ பிரிவினர் தரப்பில் காவல்துறை அலுவலர்கள் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி உட்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தேசத்தின் பாதுகாப்பு தொடர்பானது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் கியூ பிரிவு காவல்துறையினர் 3 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

அதன் பின்னர் ஆறு மாதங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது குற்றமில்லை என்பது உறுதி ஆனதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடப்படுகிறது. அதேசமயம் பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர். அதோடு  இந்த விவகாரம் தொடர்பாக  மீண்டும் பேசிய பாஜகவின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுவது. அவர் இல்லையெனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget