மேலும் அறிய

அதிமுகவின் வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை - ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

அண்ணாமலை தான் வைத்திருக்க கூடிய மாநிலத் தலைவர் பதவியை கண்ணிய குறைவோடு நடத்துகின்ற அளவில் உங்கது அவரது பேச்சு. - ஆர்பி உதயகுமார் பேட்டி.

பதவி வெறி மற்றும் பதவி மோகத்தினால், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார். 
 
ஆர்.பி.உதயகுமார் பேட்டி
 
மதுரை சமயநல்லூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...,” நண்டு கொழுத்தால் வலையில் தங்காது, அது போல அண்ணாமலை பேச்சு நண்டு கொழுத்தது போல உள்ளது. அதிமுக சமூக நீதிக்காக 69 சதவீத இட ஒதுக்கீடு வாங்கித் தந்தது. அதிமுகவின் வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை இன்றைக்கு மன அழுத்தத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டது போல் நேற்றைய பொது கூட்டத்தில் பேசியிருக்கிறார். அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவர் சந்தித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சித்தம் கலங்கியவர்கள் பேசுவது அவர்களுக்கு என்ன பேசுகிறோம் என்பது தெரியாது., மற்றவர்களுக்கும் புரியாது அவர்களின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் இருக்காது. பதவி வெறி மற்றும் பதவி மோகத்தினால், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார். எந்த உழைப்பும் இல்லாமல் ஒரு சொட்டு வேர்வை சிந்தாத அண்ணாமலை பதவி வெறியில், சித்தம் கலங்கி உள்ளார். அண்ணாமலை மனநல மருத்துவர் அணுக வேண்டும், அப்படி இல்லை என்றால் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம் எங்களை அணுகுங்கள் உங்களுக்கு மதுரையில் நல்ல மருத்துவரை ஆலோசனைக்கு அனுப்புகிறோம்.
 
தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு உங்களால் என்ன செய்ய முடியும்.?
 
அக்டோபஸ் அட்டைப்பூச்சியின் நஞ்சுக்கு மருந்து கிடையாது.? அதுபோல அண்ணாமலை தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை.! இனிமேலும் செய்யப் போவதில்லை.! ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு உளறுகிறார் அண்ணாமலை.? தமிழக பாஜக தலைவராக வந்த அண்ணாமலை அவிழ்த்து விட்ட கட்டுக் கதைகள் தமிழக மக்களுக்கு சாத்தியமில்லை என தெரிய வந்துள்ளது. தனது முதல்வர் கனவு பறிபோயிடும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை உளறி வருகிறார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அம்மாவின் இல்லத்திற்கு தேடி வந்தவர் மோடி., ஒரு இணக்கமான உறவை வைத்து தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கினார். ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிச்சாமி 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கினார்.  தமிழகத்திற்கு எந்த வளர்ச்சியும் பெற்றுத்தந்திடாத பைத்தியக்கார ஆட்டோபஸ் அண்ணாமலை மக்களுக்கு எந்த திட்டமும், வளர்ச்சியும் பெற்று தந்திட மாட்டார். தான் சார்ந்த கட்சியை பின்னுக்குத் தள்ளி அனைத்து கட்சிகளையும் அளிப்பேன், ஒழிப்பேன் என ருத்ர தாண்டவம் ஆடும் அண்ணாமலை.? தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு உங்களால் என்ன செய்ய முடியும்.? என கேள்வி எழுப்பினர். மத்திய அரசின் நிதி நிலை பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு சதவீதம் கூட நிதி ஒதுக்காததற்கு துப்பு கெட்ட அண்ணாமலை சீறி எழுந்து இருக்கா வேண்டாமா.? சிறப்பு திட்டங்கள், ரயில்வே திட்டங்களை மத்திய அரசு புறக்கணிப்பு.? செய்ததற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததற்கு இதுவரை ஏன் அண்ணாமலை வாய் திறக்கவில்லை.!
 
அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுகிறோம்
 
ஆனால் நீங்கள் IPS பதவியில் இருக்கும் போது "என் சேவை எப்போதும் தமிழ்நாட்டில் தான் இருக்கும், கர்நாடகவில் இருக்காது என கூறி இருக்கவேண்டும். இல்லையென்றால் பதவி தேவையில்லை வேண்டாம் என்று நீங்கள் சொல்லி இருக்க வேண்டும். "இந்த அண்ணாமலை பச்சை தமிழன் என சொல்லிக்கொண்டு பச்சை துரோகியாக கர்நாடகாவில் சேவை செய்து அங்கு தமிழினத்தை கேவலமாக பேசி இன்று பாஜகவில் நியமன பதவி வைத்துக்கொண்டு வாய்ச்சவுடால் பேசும் அண்ணாமலை உரக்க பேசினால் உண்மையாகி விடாது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஊமைகள் போலவும், நீங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்ற அவதார புருஷன் போல மூன்று ஆண்டுகளில் இவ்வளவு வாய்ச்சவடால் எதற்கு.? அண்ணாமலை." ஒரு பைசா லஞ்சம் வாங்காத அண்ணாமலை தமிழகத்திற்கு என்னென்ன பெற்றுத் தந்திருக்கிறேன் என்று குறிப்பிடுங்கள் நாங்கள் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுகிறோம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகம் இல்லை.? உழைப்பு இல்லை. பாஜகவின் 100 ஆண்டு கட்சியில், 3 ஆண்டு என்ட்ரி கொடுத்த அண்ணாமலையின் என்ட்ரி தாமதமான என்ட்ரி.? இன்றைக்கு கோகுல அஷ்டமி தமிழக மக்களை இந்த கிருஷ்ண பரமாத்மா காப்பாற்ற வேண்டும் என்றார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும்  குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICEArvind Kejriwal :ஆண்களுக்கு FREE BUS! கெஜ்ரிவால் பக்கா ஸ்கெட்ச்! தலைவலியில் காங்கிரஸ் | Aam Aadmi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும்  குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Embed widget