டங்ஸ்டன் எடுக்கும் எண்ணம் இல்லை.. அறிவித்த அண்ணாமலைக்கு பெண்கள் குலவை !
டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் இதனை மத்திய அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை மேலூரில் கிராம மக்களிடையே பேச்சு.

உடனடியாக டங்ஸ்டனுக்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு நல்லபடி பொங்கலை கொண்டாட வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.
மேலூரில் டங்ஸ்டன் திட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அ.வல்லாளப்பட்டி கிராமத்தில் தமிழக பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை டங்ஸ்ன் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று இருந்தனர். அப்போது பேசிய அண்ணாமலை "மதுரை மேலூரில் 4979 ஏக்கர் பரப்பளவில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படும் இதற்கான அறிவிப்பினை மத்திய கனிமம் மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த மாதம் சென்னை வரும் பொழுது அறிவிக்க வாய்ப்புள்ளது. அதற்கான உறுதியை தமிழக பாஜக அளிக்கிறது. எனவே மக்கள் உடனடியாக டங்ஸ்டனுக்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு உங்களை நல்லபடி பொங்கலை கொண்டாட வேண்டும்", என கோரிக்கையை முன் வைத்தார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்.."மக்கள் டங்ஸ்டனுக்கு எதிராக கடந்த இரு தினத்திற்கு முன்பாக 18 கி.மீ தூரம் நடந்தே அறவழியில் போராட்டத்தை நடத்தி முடித்து இருக்கின்றனர். மேலூர் அரிட்டாப்பட்டி நாயக்கர் பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். மத்திய அரசு இந்த பகுதியில் இருக்கும் டங்ஸ்டனை எடுக்க 4979 ஏக்கர், 20 ஸ்கொயர் கி.மீ பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை நடத்தியது. இதனை ஹிந்துஸ்தான் ஜிங் நிறுவனம் ஏலத்திப் எடுத்தது. இந்த ஏலம் தொடர்பாக கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்து போராட்டம் செய்ததால் கனிமவளத்துறை சார்ந்த அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு இது தொடர்பான டிச.12ம் தேதி கடிதத்தை எழுதுகிறோம். அதன் அடிப்படையில் மத்திய அமைச்சர் இந்தப் பகுதியில் அமைவிருக்கும் டாங்ஸ்டன் திட்டம் வேண்டாம் என மாநில அரசு வழங்கிய கடிதத்தின் (Letter of intent) அடிப்படையில் முடிவை எடுத்து தற்காலிகமாக நிறுத்தி இருந்தது.
கிளியரன்ஸை கொடுக்க வேண்டாம்
ஆனால் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டம் நடத்தினர். மத்திய அரசு இந்த திட்டத்தை எதற்காக கொண்டு வந்தது. மாநில அரசு ஏன்? இத்திட்டத்தை எதிர்க்க வில்லை, மாநில அரசு எதிர்க்காததால் மத்திய அரசு ஏலத்தை அறிவித்தது. கடந்த பிப்ரவரி 2024-ல் நடந்த முதல் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. எனவே, இரண்டாவது முறையாக நடந்த ஏலத்தைதான் இந்துஸ்தான் ஜிங் என்ற நிறுவனம் எடுத்தது. எப்பொழுது இது திட்டம் வேண்டாம் என மக்கள் சொல்லிய பிறகு அரசியலைக் கடந்து கட்சியைக் கடந்து, மாநில அரசு மத்திய அரசு என்பதை கடந்து மக்களின் கோரிக்கை பிரதானமாக இருந்தது. எனவே, இதனை மத்திய கனிம சுரங்க துறை அமைச்சருக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். இத்திட்டத்தால் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட வருவாய் கிடைக்காது முழுவதுமாக ஏழத்துக்குப் பிறகு வருவாயை அனுபவிப்பது மாநில அரசு மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துக்கு மட்டுமே, மாநில அரசுதான் பல்வேறு விதமான கிளியரன்ஸை கொடுக்க வேண்டும் அதனை கொடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டோம். அரிட்டாபட்டி பல்லுயிர் தளம் 477 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதையும் தாண்டி எங்கேயும் வேண்டாம் என பொதுமக்கள் கூறுகின்றனர் மக்களின் கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் எடுத்துச் சென்றோம்.
எதற்கு வந்தேன் தெரியுமா?
மத்திய கனிம மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி வருகின்ற ஜனவரி 17, 18 ,19 ஆகிய மூன்று நாட்களில் சென்னை வருகிறார். அப்பொழுது அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் அல்லது இந்தப் பகுதியைச் சேர்ந்த 5 பிரதிநிதிகளை டெல்லி அழைத்துச் சென்று சந்திக்க ஏற்பாடு செய்வோம். இந்த பகுதியில் டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாதத்தை பாரதிய ஜனதா கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். சுரங்கத்துறை அமைச்சரே டங்க்சன் திட்டம் வராது என அறிவிக்க இருக்கிறார். நான் இங்கே வந்ததற்கான மிக முக்கிய காரணம் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது அதனைக் கொண்டாடுவதை விடுத்து மக்கள் ஒரு பயத்தோடு அச்ச உணர்வோடு இருக்கின்றனர், இதனை மக்களிடம் தெரிவித்து இருக்கிறோம் மக்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்று இருக்கிறார்கள்” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

