மேலும் அறிய

சிவகங்கையில் பழமையான பாசிமணி, இரும்பு மற்றும் செம்பாலான பொருள் கண்டெடுப்பு !

காளையார் கோயில் பாண்டியன் கோட்டையில் பழமையான பாசிமணி, இரும்பு மற்றும் செம்பாலான பொருள் கண்டெடுப்பு.

பளிங்கிக்  கல்லாலான கண்ணாடியைப் போன்ற பாசி மணி ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது, இம்மணியின் நடுவில் கோர்க்க நேர்த்தியாக துளையிடப்பட்டு வட்ட வடிவில் தட்டையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் எச்சங்கள் கண்டெடுப்பு

காளையார் கோவிலில் புறநானூற்று  சிறப்புமிக்க பாண்டியன் கோட்டை மேட்டுப்பகுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா. சரவணன் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் பழமையான பளிங்கிக் கல்லாலான பாசிமணி மற்றும் செம்பினால் ஆன கைப்பிடியோடு இரும்பால் செய்யப்பட்டுள்ள பொருள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
மழை நீர் வடியும் வகையில் வாய்க்கால் தோண்டப்பட்டது
 
இதுகுறித்து புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது..,” காளையார் கோவில் நகரின் மையப்பகுதியில் புறநானூற்றில் வேங்கை மார்பன் ஆட்சி செய்த கோட்டையை பாண்டியன் உக்கிர பெருவழுதி கைப்பற்றிய செய்தி பாடப்பட்டுள்ளது. இதற்கு சான்றாக 37 ஏக்கர் பரப்பளவில் இன்று  பழமையான மண்மேடாக வட்ட வடிவில் காட்சியளிக்கிறது பாண்டியன் கோட்டை. இதைச் சுற்றி அகழி மற்றும் நடுப்பகுதியில் நீராவி குளம் ஆகியன அமைந்துள்ளன. மேலும் கிழக்குப் பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோவில் தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் ஆகியன இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் இதைச் சுற்றியுள்ள நகர்ப் பகுதியில் மழை நீர் வடியாததால் நடுவில் உள்ள நீராவிக் குளத்தின் இரண்டு பக்கங்களிலும் உள்ளாட்சி அமைப்பில் இருந்து மழை நீர் வடியும் வகையில் வாய்க்கால் தோண்டப்பட்டது. அது முதல் இங்கு பழமையான பொருள்கள் தொடர்ச்சியாக சிவகங்கை தொல்நடைக் குழுவினரின் மேற்பரப்பு கள ஆய்வில் கிடைத்து வருகின்றன.
 
 பழமையான பொருள்கள்
 
பழமையான சங்க கால செங்கல் எச்சங்கள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், மேற்கூரை ஓட்டு எச்சங்களில் துளையிடப்பட்ட ஓடுகள், வட்டச் சில்லுகள் எடைக் கற்கள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், எலும்பினால் செய்யப்பட்ட கருவி முனைகள் ஆகியவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
 குறியீடு மற்றும் தமிழி எழுத்து பானையோடுகள்.
 
குறியீடுகள் காலத்தால் எழுத்துக்களுக்கு முற்பட்டவை என்பது பொதுக்கருத்து. அவ்வாறான குறியீடுகள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் மோசிதபன்,ன் கூட்டம் என எழுதப்பட்ட  பானையோடுகள் கிடைத்துள்ளன.
 
 முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு.
 
மேற்பரப்பு கள ஆய்வில் தொடர்ச்சியாக பழமையான பொருள்கள் கிடைத்து வருவதால் சிவகங்கை தொல்நடைக் குழு இவ்விடத்தில் அகழாய்வு செய்ய தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர், அதன் அடிப்படையில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு செய்தனர், பின்னர் முன்னுரிமைஅடிப்படையில் அகழாய்வு நடத்தப்படும் எனும் தகவல் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கடிதம் வழி தெரிவித்துள்ளனர்.
 
 பாசி மணி, செம்பு மற்றும் இரும்பாலான பொருள்.
 
பளிங்கிக்  கல்லாலான கண்ணாடியைப் போன்ற பாசி மணி ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது, இம்மணியின் நடுவில் கோர்க்க நேர்த்தியாக துளையிடப்பட்டு வட்ட வடிவில் தட்டையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செம்பினால் கைப்பிடி செய்யப்பட்டு உள்ளே இரும்பு நுழைக்கப்பட்ட வேலைப்பாடுடைய பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது, இது சிறிய வடிவிலான இரும்பால் செய்யப்பட்ட கத்தி அல்லது குறுவாள் என ஏதாவது ஒரு பொருளாக இருக்கலாம், ஆனாலும் இரும்பும் செம்பும் பன்னெடுங்காலமாக நமது பயன்பாட்டில் இருப்பதை இவ்வாறான தொன்மையான பொருள்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Affordable Mileage Cars 2026: புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Embed widget