மேலும் அறிய
Madurai Hc: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அம்பேத்கர் சிலை.. தீர்ப்புக்காக தேதி ஒத்திவைப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
75வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில், அரசியலமைப்பின் சிற்பி டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் வெண்கலச் சிலை அமைக்க உத்தரவிட கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கருக்கு சிலை கோரி மனு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள பட்டம் கிராமத்தை சேர்ந்த ப.வீரபாண்டியன் , தாக்கல் செய்த மனுவில்...,”டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப் பின் சிற்பி. நமது இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார். மேலும் அவர் நமது சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். நமது நாட்டின் மக்களுக்கும் இந்திய அரசியலமைப்பின் மூலம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வர காரணமாக இருந்தவர். நமது அரசியலமைப்பின் 14 வது பிரிவு அனைத்து மக்களுக்கும் சட்டத்தின் சம பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் கிடைக்க காரணமானவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலின சாதி மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது .
வெண்கலச் சிலை அமைக்க உத்தரவிட வேண்டும்
நமது நாட்டில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கருக்கு ஏராளமான சிலைகள் உள்ளன. நமது நாடாளுமன்றத்திலும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலை பொது நூலகத்தில் நிறுவப்பட்டது. ஆஸ்திரேலிய அரசும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் சிலையை நிறுவி அவரை கவுரவித்துள்ளது. இந்த சூழலில் ,சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தென் மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். 75வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு , உயர் நீதிமன்ற வளாகத்தில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் வெண்கலச் சிலையை நிறுவி, அவரை கவுரவிக்க வேண்டும். இது குறித்து, தமிழக சட்ட அமைச்சரிடம் கோரிக்கை மனு ஏற்கனவே அளித்துள்ளேன். எனவே, உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில், டாக்டர்.B.R. அம்பேத்க ரின் வெண்கலச் சிலை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் M.S.ரமேஷ், மரிய கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தமிழ்நாடுதான் இந்தியாவின் தற்கொலைத் தலைநகரமா..? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தர்காவா? தமிழக அரசு பரபரப்பு பதில்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
சென்னை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion