கொடைக்கானல் வரும் நடிகர் விஜய்... மதுரை விமான நிலையத்தில் கூடிய ரசிகர்களால் பரபரப்பு
கொடைக்கானல் செல்லும் விஜய் தாண்டிக்குடி மலைகிராமத்தில் தனியாா் விடுதியில் ஓய்வெடுக்கிறாா். அங்குள்ள தனியாா் தோட்டத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாா்.
ஜன நாயகன் படப்பிடிப்பிற்காக வியாழக்கிழமை இன்று தவெக தலைவரும், நடிகருமான விஜய் கொடைக்கானல் செல்கிறாா். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு நடிகா் விஜய் தீவிர அரசியலில் கவனம் செலுத்திவருகிறாா். இந்நிலையில் தனது திரை வாழ்க்கையில் கடைசி படமான ஜன நாயகன் படத்திலும் நடிகா் விஜய் நடித்து வருகிறாா். அடுத்த ஆண்டு திரைப்படம் வெளியாகும் நிலையில் அதற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவருகிறது. படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் விஜய் தாண்டிக்குடி மலைகிராமத்தில் தனியாா் விடுதியில் ஓய்வெடுக்கிறாா். பின்னா் அங்குள்ள தனியாா் தோட்டத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாா்.
இந்த நிலையில் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இன்று மதுரை வருவதாக தகவல் வந்ததை அடுத்து இன்று காலை முதலே மதுரை விமான நிலையத்தில் காத்திருக்கும் ரசிகர்கள். இன்று மாலை 4 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடிக்கு செல்ல உள்ள நிலையில். அதிகாலை முதலே ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
ஆனால் கொடைக்கானல் நகர் பகுதிக்கு வராமல் நேரடியாக விஜய் தாண்டிக்குடியில் நடைபெறவுள்ள படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் இந்த படப்பிடிப்புகள் இப்பகுதியில் நடைபெற உள்ளதாகவும், விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் இங்கு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வரும் விஜய், அங்கிருந்து காரில் தாண்டிக்குடி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் வரும் விஜய்யை வரவேற்க யாரும் வர வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





















