மேலும் அறிய

Madurai: சின்னத்திரை காமெடி நடிகருக்கு நேர்ந்த கதி; கால்களை உடைத்த மனைவி - 6 பேர் கைது

திருமணத்தை மீறிய உறவால், பிரபல காமெடி நடிகரின் உறவை ஏற்றுக் கொள்ள முடியாத மனைவி,  ஆட்களை ஏவி இரண்டு கால்களையும் உடைத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷன்( வயது - 50). இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட  பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். தற்பொழுது  மதுரையில் ஏஜென்சி வைத்து விளம்பரங்கள் எடுப்பது, (event Organizing) நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்றவற்றை செய்து வருகிறார்.

இவர் பேஸ்புக்கில் ஆக்டிவாக ரீல்ஸ், அரசியல் கருத்து, பாடல் பாடி வீடியோ பதிவிடுது போன்றவற்றில் ஆர்வமாக இருந்துள்ளார். சமீபத்தில் பாஜக கட்சிக்கு எதிராகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.  பாஜகவினரும் சின்னத்திரை நடிகரை நேரில் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, காமெடி நடிகர் வெங்கடேஷுக்கு கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.  இது மனைவி பானுமதிக்கு தெரியவர அதனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அவ்வபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

Madurai: சின்னத்திரை காமெடி நடிகருக்கு நேர்ந்த கதி; கால்களை உடைத்த மனைவி - 6 பேர் கைது

இதற்கு இடையே வெங்கடேஷ் மனைவிக்கு விவாகரத்து நோட்டீசை  வழங்கினார். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையிலும் இருவரும் ஒரே வீட்டிலேயே  வசித்து வந்துள்ளனர். கணவர் தன்னுடன் மட்டுமே வாழவேண்டுமென என முடிவு செய்த பானுமதி தனது வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரியும் மோகன் என்பவரிடம் வெங்கடேஷ் காலை உடைத்து வீட்டில் போட திட்டம் தீட்டினார்.

 ராஜ்குமார் என்பவரை மோகன் அறிமுகம் செய்து வைக்க, ராஜ்குமார்  காலை உடைக்க ஒரு லட்சம் கேட்கவே அந்த முடிவை கைவிட்டு உள்ளார். கணவர் மீது வெறுப்பில் இருந்த நிலையில் பாஜகவில் இருக்கும் உறவினரான வைரமுத்து பானுமதிக்கு அறிமுகமாகி உள்ளார். அவரிடம் கணவர் தொடர்பில் இருப்பது குறித்து பேச, பாஜக பற்றி தவறாக பதிவிட்ட வெங்கடேஷ் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு கடந்த ஜூன்15ம் தேதி இரவு டிரைவர் மோகனுடன் திட்டம் போட்டு  வெங்கடேஷை  திருப்பாலை செல்லும் வழியில் உள்ள நாகனாகுளம் கண்மாய் பகுதிக்கு  அழைத்து வரச் சொல்லி அங்கு மறைந்திருந்த மலைசாமி, அனந்தராஜ், வைரமுத்து கட்டையால் இரண்டு கால்களையும் அடித்து உடைத்தனர்.  

Madurai: சின்னத்திரை காமெடி நடிகருக்கு நேர்ந்த கதி; கால்களை உடைத்த மனைவி - 6 பேர் கைது

வெங்கடேஷ் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வெங்கடேஷை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து பீ.பீகுளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து, வெங்கடேஷ் தல்லாகுளம் போலீசில் அளித்தப் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், வெங்கடேஷ் மனைவி பானுமதி(48), ராஜ்குமார்(37), மோகன்(40) வைரமுத்து(38) மலை சாமி(35) ஆனந்தராஜ் (37) ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருக்கும் துளசி என்பவரை தேடி வருகின்றனர்.

திருமணத்தை மீறிய உறவால் பிரபல காமெடி நடிகரின் உறவை ஏற்றுக் கொள்ள முடியாத மனைவி  ஆட்களை ஏவி இரண்டு கால்களையும் உடைத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைக்கு அழைத்துச் செல்லும் போதும் வைரமுத்து, மலைசாமி, ஆனந்த் ராஜ் காவி துண்டை கழுத்தில் அணிந்தபடி பாரத் மாதாகி ஜெய் என்ற கோஷமிட்டபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: ''அமைச்சருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை தான் திராவிட மாடல்"- அண்ணாமலை சாடல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget