மேலும் அறிய
Advertisement
Abp Nadu Exclusive: ரயில் பயணத்தில் இனி கருவாடும் கொண்டு போகலாம் - மதுரை ரயில் நிலையத்தில் புது முயற்சி
'கருவாடு பேக்கிங்கில் செயல்முறை யூ- டியூப் கியூவார் கோடும் இணைத்துள்ளோம். அதன் மூலம் செயல்முறை விளக்கங்களையும் பார்த்து கருவாடு சமைத்துக் கொள்ளலாம்" என்றார்.
கருவாடு வீச்சம் இல்ல அது ஒரு விதமான வாசனை என்பார்கள் கருவாடு விரும்பிகள். எல்லாருக்கும் கருவாடு பிடிக்காது என்றாலும் பிடித்தவர்களுக்கு அதன் சுவை அலாதியாக தெரியும். இப்படியான கருவாட்டிற்கென மதுரை ரயில் நிலையத்தில் நிரந்த கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனைக் கூடம் (கருவாடு விற்பனையகம்) தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கிருஷ்ணசாமி, மற்றும் பிடெக் பயோ டெக்னாலஜி முடித்த கலைக்கதிரவன் ஆகியோர் இணைந்து மண்டபம் பகுதியை சேர்ந்த புதுமைப் பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் மதுரை ரயில் நிலையத்தில் லெமூரியன் உலர் மீன் விற்பனைக்கூடத்தை தொடங்கி உள்ளனர்.
மகளிர் சுய உதவி குழு பெண்கள் ஒன்றிணைந்து பல்வேறு தொழில்களை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மற்றும் கலைக்கதிரவன் ஆகியோர் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மூலம் தங்கள் மாவட்டத்தின் பிரபலமான கருவாட்டை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் கருவாடு வாடையின்றி பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உலர் மீன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது, பலரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
இங்கு சிறப்புமிக்க 30க்கும் மேற்பட்ட கருவாடு வகைகள் பேக் செய்யப்பட்டு வாடையே இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நெத்திலி, வஞ்சிரம், காரல், பண்ணா, நகரை, வாலை, திருக்கை, கிளாத்தி, பாறை வகை கருவாடுகள் அளவுக்கேற்ப சிறந்த தரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. லெமூரியன் உலர்மீன் விற்பனை கூடத்தை தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவன நிர்வாக இயக்குநர் சிவராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த கடையினை நேரடியாக சென்று பார்வையிட்டோம்.
கருவாட்டுக் கடையில் இருந்தபடி நமக்கு விளக்கினார் கிருஷ்ணசாமி, " லெமூரியன் என்ற பெயரில் 4 வருடமாக கருவாடுகள் விற்பனை செய்து வருகிறோம். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலமும் விற்பனை செய்கிறோம். அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை என்ற திட்டத்தின் கீழ் உள்ளூர் பொருளான கருவாடை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். அதில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. இதைத் தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்திலும் இதே போன்ற கடை அமைக்க வேண்டும் என கமர்சியல் டிபார்ட்மெண்டை அணுகினோம். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் கடை வைக்கமுடியாது என்று தெரித்தனர்.
அதையடுத்து ஒருவருடம் கழித்து வேறு ஒரு திட்டத்தில் அதாவது “NINFRIS - New, Innovative Non Fare Revenue Ideas Scheme” என்ற திட்டத்தில் எங்களுக்கு கடை வைக்க அனுமதித்தனர். அதற்காக எங்களுடைய பொருட்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் கடை வைக்க அனுமதி வழங்கினர். எங்களுடைய கடையின் ஆம்பியன்ஸ் சிறப்பாக இருக்கும். சுத்தம் சுகாதரம் பேணவேண்டும் என ஒவ்வோன்றையும் பார்த்துப் பார்த்து செய்கிறோம். கடையை ஒரு கடல் த்தீமில் அமைத்திருக்கிறோம். கருவாடு பேக்கிங்கை சிறந்த முறையில் செய்துள்ளோம். அதனால் ரயில் பயணத்தில் வாடை இருக்கும் என பயப்பட தேவையில்லை. ரயில் நிலையத்தில் பயணிகள் எப்போதும் வந்து செல்வார்கள் என்பதால் 24 மணி நேரமும் கடை செயல்படும். கருவாடு பேக்கிங்கில் செயல்முறை யூ டியூப் கியூவார் கோடும் இணைத்துள்ளோம். அதன் மூலம் செயல்முறை விளக்கங்களையும் பார்த்து சமைத்துக் கொள்ளலாம்" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கல்பனா சாவ்லா விருது பெற்றவருக்கு தலையாரி வேலை கூட கிடைக்கவில்லை ; வேதனையில் மாற்றுத்திறனாளி வீரங்கனை !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion