Madurai: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடையா? ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு!
கலைஞர் நூலகத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது என தெரிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் கடந்த 15-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நூலகத்திற்கு தொடர்ந்து பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். காலை 8-மணி முதல் இரவு 8-மணி வரை நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலகம் திறந்து மறுநாளே 3648 நபர்கள் குறிப்பேட்டில் கையெழுத்திட்டனர்.
#மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் நூலகத்தில் புகைப்படம், வீடியோ, தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லை, குழந்தைகள் பிரிவில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி என நோட்டீஸ்.... pic.twitter.com/tGq2X9DsIr
— arunchinna (@arunreporter92) July 23, 2023

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




















