தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடுமையான மழை பெய்திருக்கிறது என்ற போதிலும் சென்னையில் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் 250 மில்லி மீட்டருக்கும் கூடுதலான மழை பெய்துள்ளது. பல இடங்களில் 200 மி.மீக்கும் கூடுதலான மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. சென்னையின் எந்த பகுதியிலும் 100 மி.மீக்கு குறைவான மழை பெய்யவில்லை. இயல்பை மீறி இந்த அளவுக்கு மழை பெய்யும் போது நிலைமையை சமாளிப்பது பெரும் சவாலானது தான். ஆனாலும் இன்று அதிகாலை முதலே முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி அருகே ஆற்றை கடக்க முயன்ற போது விவசாயி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பகுதியான உசிலம்பட்டி, பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது சாப்டூர் கேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பேரையூர் அருகே சாப்டூர் - ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்ற விவசாயி தனது தோட்டத்திற்கு செல்வதற்காக விட்டல்பட்டி ஆற்றை கடந்து செல்ல முயன்ற போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஆற்றில் ராஜசேகர் அடித்துச் செல்லப்பட்டார்.
இதை சற்று கவனிக்கவும் -Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற
https://bit.ly/2TMX27X*
உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த டி.கல்லுப்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் விடிய விடிய இரவு முழுவதும் தேடி சாப்டூர் அருகே உள்ள கண்மாயில் ராஜசேகரின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
விவசாயி ராஜசேகர் ஆற்றை கடக்க முயன்றபோது உறவினர் ஒருவர் ராஜசேகரை எச்சரித்தவாரு எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வெள்ள ஆற்றை அவர் கடக்கும் போது, வீடியோ எடுக்கும் நபர் அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் ஆற்றை கடக்கிறார். இழுத்தா வந்திருவேன் என அந்த நபர் கூறுவது போன்று வீடியோவில் உள்ளது.
இச்சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
றனர்.