மேலும் அறிய
Advertisement
பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பண வழக்கு: பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் வேறு துறைகளுக்கு பயன்படுத்தியது மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட ரூ.265 கோடியை மீண்டும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்.
பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் வேறு துறைகளுக்கு பயன்படுத்தியது மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட ரூ.265 கோடியை மீண்டும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்க கோரிய வழக்கில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து 2018-2019, 2019-2020, 2020-2021 ஆகிய ஆண்டுகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1,310 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.265 பழங்குடியின மக்களுக்கு செலவிடப்படாமல் 2019-2020 நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ. 10 கோடியும், 2020-2021 நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ. 67.77 கோடியும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகளுக்கு ரூ. 58.17 கோடிகள் என மொத்தம் ரூ.129.9 கோடிகள் பிற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளான நில உரிமை பட்டா, குடியிருப்பு வீடுகள், மின்சாரம், சாலை, சுகாதாரம் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக நடைபெறாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை திரும்ப அனுப்புவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, 2018-2019, 2019-2020, 2020-2021 ஆகிய நிதி ஆண்டுகளில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் வேறு துறைகளுக்கு பயன்படுத்தியது மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட ரூ.265 கோடியை மீண்டும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், எந்தத் துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறதோ அந்த துறைகளிலேயே பணம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
மற்றொரு வழக்கு
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் அருகே 9 மீட்டர் உயரத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது எப்படி ? - மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி
திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள கட்டிங்களை அகற்ற கோரிய வழக்கில் திருச்சி மாநகராட்சி ஆணையர், திருச்சி மாவட்ட நகர திட்டமிடல் இணை இயக்குனர், அரந்கநாதர் கோயில் இணை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர், குளித்தலையை சேர்ந்த மகுடேஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில்"தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டங்களை கட்ட கூடாது என விதிமுறை உள்ளது.திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் இந்த அரசாணையை மீறி, சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கோயிலிலிருந்து 100 மீட்டருக்குள் கட்டப்பட்டுள்ளன. அதே போல கோயில் அருகே அமைந்துள்ள உத்தரவீதி, சித்திர வீதிகளிலும் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு விதிமீறி கட்டபட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய அகற்றுவதற்காக ஆணையாளரை நியமித்து அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு, "கோவில் அருகில் 9 மீட்டர் உயரத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது எப்படி? என கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ஆணையர், திருச்சி மாவட்ட நகர திட்டமிடல் இணை இயக்குனர், திருச்சி அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion