மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
மதுரையில் கிடைத்த மாடக்கோயில் சிற்ப அமைப்புடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான நடுகல்
உசிலம்பட்டி அருகே மாடக்கோவில் சிற்ப அமைப்புடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான நடுகல்-யை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்துபோனவர்களை தியாகிகளாக போற்றிய பண்பாடாக தமிழர் பண்பாடு உள்ளது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர்.
இதன் பொருள் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான். அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே மாடக்கோயில் சிற்ப அமைப்புடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான நடுகல்-யை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஜே.மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள மாலைக்காடு என்ற இடத்தில் இந்த பகுதியில் இறக்கும் மக்களுக்கு நடுகல் அமைப்பதை காலம் காலமாக இன்றளவும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த இடத்தில் தூய்மை செய்வதற்காக மணலை தோண்டிய போது 6 அடி உயரத்தில் கலை நயத்துடன் கூடிய சிற்பங்களுடன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நடுகல் குறித்து அறிந்து கள ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர். இந்த நடுகல் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும்., நடுகல்லின் மூன்று பகுதிகளிலும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தலா ஒரு அடி வீதம் என 9 சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் தலைவன் ஒருவருக்கு குடை பிடித்து செல்வது போன்றும், பசுமாட்டில் பால் குடிக்கும் கன்று, மான், இசை கருவிகள் வாசிக்கும் பெண்கள் என ஒன்பது சிற்பங்களும் கலை நயத்துடன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வளமையுடன் வாழ்ந்தவரின் நினைவாக இந்த நடுகல் எழுப்பி இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Autism Children: முதல்வர் இதை செய்தால்... ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் வாழ்வில் ஒளி.. மருத்துவர் ராஜலக்ஷ்மி தகவல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion