25 நொடிகளில் 51 ராக்கெட்டுகளின் பெயர்களை சொல்லி அசத்தல்...! 7ஆம் வகுப்பு மாணவனை அழைத்து பாராட்டிய சு.வெ...!
மோட்டார் வாகனங்களுக்கு ஹைட்ரஜன் எரி பொருள் பயன்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்பிற்கு மதுரை பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் அகிலேஷ் தங்கப்பதக்கம் வென்றார்

போலந்தில் 2021ஆம் நடந்த இன்டர்நேஷனல் 'வார்ஸா இன் வென்ஷன் ஷோவில் அகிலேஷ், பங்கேற்ற மோட்டார் வாகனங்களுக்கு ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்துவது குறித்த புதிய கண்டு பிடிப்பை செயல்முறைப் படுத்தினார். அவரது இந்த கண்டுபிடிப்புக்காக தங்கம் மற்றும் இரண்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. ருமேனியாவின் சிறப்பு விருதும் பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவன் அகிலேஷை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போலந்தில் இரண்டு பதக்கங்களை வென்ற எங்கள் இளம் விஞ்ஞானி !
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 5, 2022
25 நொடிகளில் 51 ராக்கெட்டுகளின் பெயரை கூறி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்த சாதனையாளன்!
மதுரையின் அறிவுக்குழந்தை அகிலேஷ் …
மண்ணின் பெருமைகளை விண்ணில் உயர்த்து !#Madurai #Space #ISRO pic.twitter.com/F6GIqufp0a






















