சார்பு ஆய்வாளர் பதவிக்கான தேர்வு; தேனியில் 4522 பேர், திண்டுக்கல் 7246 பேர் எழுதினர்
தேனி மாவட்டத்தில் 4522 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 7246 பேரும் சார்பு ஆய்வாளர் பதவிக்கான தேர்வு எழுதினர்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில், இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு இன்று நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 4 ஆயிரத்து 522 பேருக்கு இணையதளம் மூலமாக ஹால்டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டது. இந்த தேர்வுக்காக மாவட்டத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
மேலும் படிக்க: கருக்கலைப்பு உரிமை ரத்து! அடுத்து தன்பாலின திருமண உரிமை? அமெரிக்காவில் நடப்பது என்ன?
அதன்படி தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தலா ஒரு மையமும், தேனி கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் 3 மையங்களும் அமைக்கப்பட்டது. தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு முன்பே வந்தனர். தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கியது. தேர்வு நடைபெறும் இடங்களில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமஸ் டோங்கரே பார்வையிட்டார்.
அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 7246 பேர் எழுதினர். இந்த தேர்வானது திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பள்ளி, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரி, சக்தி கல்லூரி உட்பட 8 இடங்களில் நடந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த 888 போலீசார் சார்பு ஆய்வாளர் பதவிக்கான தேர்வு எழுதினர். தேர்வு அறை, வளாக கண்காணிப்பு பணியில் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில், 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 8 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 500 பேர் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: ADMK: ஆட்டங்காணுது தஞ்சை கோட்டை... அஸ்திவாரமாக நினைத்த ஆதரவாளர்களின் அந்தர் பல்டி..!
#தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெறுவதில் #தேனியில் மாவட்டத்தில் 4522 பேரும், #திண்டுக்கல் மாவட்டத்தில் 7246 பேரும் சார்பு ஆய்வாளர் பதவிக்கான தேர்வு எழுதினர் pic.twitter.com/pj5Wb6ZrxR
— Nagaraj (@CenalTamil) June 25, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்