மேலும் அறிய

கருக்கலைப்பு உரிமை ரத்து! அடுத்து தன்பாலின திருமண உரிமை? அமெரிக்காவில் நடப்பது என்ன?

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெற்ற தன்பாலின திருமண உரிமை, கருத்தடை உரிமை ஆகியவையும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பதன் மூலம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெற்ற தன்பாலின திருமண உரிமை, கருத்தடை உரிமை ஆகியவையும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த உரிமைகள் எந்த அளவுக்கு ஆபத்தில் இருக்கிறது என்பது கருகலைப்பு உரிமையை ரத்து செய்த நீதிபதிகளின் தீர்ப்பை படித்தால் தெரிந்துவிடும்.

தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி சாமுவேல் அலிட்டோ எழுதிய தீர்ப்பில், "கருகலைப்பை தவிர்த்து மற்ற விவகாரங்களில் சந்தேகம் எழுப்ப இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமைந்து விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருக்கலைப்பு உரிமை ரத்து! அடுத்து தன்பாலின திருமண உரிமை? அமெரிக்காவில் நடப்பது என்ன?

ஆனால், நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் எழுதிய தீர்ப்பில், "18 நூற்றாண்டில் அரசியலமைப்பை வகுத்தவர்கள் நிலைநாட்டாத உரிமைகள் யாவும் எதிர்காலத்தில் வழக்குகளை தொடுப்பதன் மூலம் பறிக்க முடியும்" என்றார். 

கருத்தடை, தனிபாலின உறவு மற்றும் தனிபாலின திருமணம் ஆகியவற்றை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய தாமஸ், "கிரிஸ்வோல்ட், லாரன்ஸ் மற்றும் ஓபர்கெஃபெல் ஆகிய நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார். மசோதா, சட்டம் ஆகியவற்றில் தெளிவாக இடம்பெறாத உரிமைகள் ஆகியவை பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

கருக்கலைப்பு உரிமை ரத்து! அடுத்து தன்பாலின திருமண உரிமை? அமெரிக்காவில் நடப்பது என்ன?

தீர்ப்பில் மாற்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், "அலிட்டோவின் உத்தரவாதத்திற்கு மதிப்பு கிடையாது. தாமஸின் கருத்து தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கருத்தடை குறித்த தீர்ப்பின் வாயிலாக நிலைநாட்டப்பட்ட தனியுரிமையால்தான் கருகலைப்பு உரிமையே கொண்டு வரப்பட்டது. இதுவே LGBTQ பிரிவினிரின் உரிமைகளாக விரிவடைந்துள்ளது" என்றார்கள்.

தாராளவாத நீதிபதிகள் சார்பாக தீர்ப்பு எழுதிய ஸ்டீபன் பிரேயர், "பெரும்பான்மை நீதிபதிகள் தங்களின் பணிகளை செய்துமுடித்து விட்டார்கள் என நம்பிக்கை கொள்ள வேண்டாம். ஒரே அரசியலமைப்பின் கீழ் வரும் பாதுகாக்கப்பட்ட மிக தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை நிலைநாட்டும் மற்ற உரிமைகள் தற்போது ஆபத்தில் உள்ளது" என்றார்.

திருமண சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்த வழக்கில் வாதாடிய உச்ச நீதிமன்ற நீதிபதி ராபர்ட்டா கேப்ளன் இதுகுறித்து கூறுகையில், "தாமஸின் கருத்து தனிபாலின திருமணத்திற்கு எதிராக பழமைவாதிகள் 
ஒன்றிணைந்து உடனடியாக வழக்கு தொடர்வார்கள் என்பதற்கான சமிக்ஞை. மதத்தின் அடிப்படையில் முதலில் தன்பாலின தம்பதியர்களுக்கு திருமண சான்றிதழ் வழங்க உள்ளூர் அலுவலர்கள் மறுப்பார்கள். எதிர்ப்பு இப்படிதான் தொடங்கும்" என்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு, இம்மாதிரியான செயலை செய்ததன் மூலமாக பழமைவாதிகளின் ஆதர்சமாக கென்டக்கியின் குமாஸ்தா கிம் டெவிஸ் உருவெடுத்தார்.

இதுகுறித்து விவரித்த ராபர்ட்டா, "எதிர்காலத்தில், இம்மாதிரியாக பல கிம் டெவிஸை பார்க்க போகிறோம். தங்களால் முடிந்த அளவுக்கு அவர்கள் திருமண சமத்துவத்தை அங்கீகரிக்க மறுப்பார்கள். விரைவாக, இம்மாதிரியான வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வரும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Embed widget