GST: மதுரையில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு புகாரில் 3 வியாபாரிகள் கைது
சங்கத்தினர் மற்றும் 3 வர்த்தகர்களின் குடும்பத்தினர் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.
மதுரை மாநகர் பங்கஜம்காலனி பகுதியை சேர்ந்த குணாளன் மற்றும் கதிரவன் அருண்சக்கரவர்த்தி ஆகிய 3 வியாபாரிகளும் மதுரை கீழமாசி வீதி பகுதியில் ஸ்டேஷ்னரி, சோப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகை பொருட்கள் விற்பனையை செய்ய கூடிய 4 கடைகளை நடத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக குணாளன் மற்றும் அவரது உறவினர்களான கதிரவன், அருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு சொந்தமான வணிக நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. வரி முறையாக செலுத்தவில்லை என மதுரை மண்டல ஜி.எஸ்.டி. இயக்குனரக நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் 3 பேரிடமும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதுரை மண்டல ஜி.எஸ்.டி. இயக்குனரக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Highcourt - Madurai Bench: கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது; அருமை எப்படி தெரியும்? - நீதிமன்றம் அதிரடி
இந்நிலையில் 3 பேரும் தனது வர்த்தகத்தின் மூலமாக பல கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி நேற்று முன்தினம் காலை விசாரணைக்காக அழைத்துசென்ற நிலையில் மாலை கடந்த 5 ஆண்டுகளாக வருவாயை மறைத்து பல கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததாக மதுரை மண்டல ஜி.எஸ்.டி. இயக்குனரக நுண்ணறிவு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர் - பின்னர் மூவரையும் மருத்துவ பரிசோதனக்கு உட்படுத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் கைது செய்து அழைத்துசென்றபோது அவர்களது நிறுவனங்களில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் குவிந்ததால் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக, வர்த்தகர்களை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அடைத்துவைத்திருப்பதாக கூறி வர்த்தகர்கள் சங்கத்தினர் மற்றும் 3 வர்த்தகர்களின் குடும்பத்தினர் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.
மதுரை மாவட்ட மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NIA Coimbatore : கோவை கார் வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் ; வெளியான அதிர்ச்சி தகவல்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்