மேலும் அறிய
ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி
சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

krishnasamy
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி அக்கூட்டணியில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் புதிய தமிழகம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவித்தார். இதையடுத்து, சென்னையில் இன்று புதிய தமிழகம் கட்சியின் 60 நபர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கிருஷ்ணசாமி வெளியிட்டார். அதில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அவர் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















