வன்னியர்களுக்கு துரோகம், சூழ்ச்சி, கொடூர ஆட்சி.. திமுகவை வெளுத்து வாங்கிய அன்புமணி - பரபரப்பு பேச்சு
Anbumani Ramadoss: பாமகவில் நடைபெறுகிற பிரச்சனைக்கு திமுக தான் காரணம், எங்களை பார்த்து திமுகவிற்கு பயம் வந்தது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். பாமகவின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சக்தி கமலாம்பாள் கலந்து கொண்டார்.
அன்புமணி ராமதாஸ் சிறப்புரை
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். முன்னதாக அன்புமணி ராமதாசுக்கு சுங்குவார்சத்திரம் பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதேபோன்று காஞ்சிபுரத்தில், க்ரைம் மூலம் மலர் தூவி, 40 அடி உயர பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டு காஞ்சிபுரம் பாமக சார்பில் வரவேற்பு அளித்தனர்.
பாமக பொதுக்குழு மேடையில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: திமுக ஆட்சி ஒரு கொடுங்கோள் ஆட்சி, அந்த ஆட்சி முழுமையாக அகற்றப்பட வேண்டும். திமுக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
பலவீனப்படுத்த திமுக சூழ்ச்சி
தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. திமுக அரசியலில் உள்ள குறைகளை மூடி மறைப்பதற்காக, திமுகவில் நடைபெறும் குற்றங்களை திசை திருப்புவதற்காக, நம்மைப் போன்ற கட்சிகளில் குழப்பம் செய்து, நம்மைப் போன்ற கட்சிகளை பலவீனப்படுத்துவதற்காக, முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சி நிச்சயமாக பலன் அளிக்காது. நான் அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல அதுதான் என்னுடைய பலம் என தெரிவித்தார்.
வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்துவிட்டது
வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்தது திமுக. ஒரு வன்னியர் கூட வாக்களிக்கக் கூடாது என மகாபலிபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் பேசினேன். இந்த சமுதாயத்திற்கு திமுக செய்த மிகப்பெரிய துரோகம்.
நான்காண்டு காலம் ரொம்ப வைத்து கழுத்து அறுத்தது திமுக. இந்த சமுதாயத்தையும், இந்த கட்சியையும், அய்யாவையும் நம்ப வைத்து திமுக கழுத்து அறுத்து விட்டது. இட ஒதுக்கீடு தடுக்கிறேன் இந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு தருகிறேன் என நம்ப வைத்து கழுத்து அறுத்து விட்டது என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
திமுக சூழ்ச்சி செய்கிறது
வன்னியர் சமுதாயத்தின் மக்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என பயம் வந்துவிட்டது. அந்த பயம் வந்ததால்தான் நம்முடைய கட்சி பலவீனப்படுத்த சூழ்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.
நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான் வில்லன். இந்த பிரச்சனைக்கு நானும் அய்யாவோ காரணம் கிடையாது என அன்புமணி தெரிவித்தார். ஒரு சிலர் நம் கட்சியிலேயே அந்த சூழ்ச்சிக்கு துணை போகிறார்கள். யார் யார் என்பது விரைவில் தெரியவரும். திமுகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது அதை உடைத்து எறிவோம்.
நான் துரோகம் செய்ய மாட்டேன்
என்னுடைய கட்சிக்கும் என்னுடைய சமுதாயத்தில், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில், கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க பேசினார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஒரு பெண் சாலையில், நடந்த செல்ல முடியுமா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லதா ஆட்சி நடைபெற்று வருகிறது. புதிய பசுமை விமான நிலையம் பரந்தூரில் தான் அமைக்கவேண்டும் என பிடிவாதமாக உள்ளது என தெரிவித்தார்.




















