எலி மருந்து வைத்த தக்காளி.. டிவி பார்க்கும் கவனத்தில், தவறுதலாக Maggi செய்து சாப்பிட்ட பெண் உயிரிழப்பு..
டிவி பார்த்துக்கொண்டே தற்செயலாக அப்பெண் எலி மருந்து வைத்த விஷம் கலந்த தக்காளியை எடுத்து தான் சமைத்துக்கொண்டிருந்த மேகி நூடுல்ஸில் சேர்த்துள்ளார்.
மும்பையில் எலி மருந்து வைத்த தக்காளியை தெரியாமல் மேகியில் சேர்த்து சமைத்து உண்ட பெண் உயிரிழந்தார்.
35 வயதுடைய ரேகா நிஷாத் எனும் இப்பெண் மும்பை, மலாட்டில் (மேற்கு) உள்ள பாஸ்கல் வாடியில் வசித்து வந்துள்ளார். தனது கணவர் மற்றும் மைத்துனருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த இப்பெண் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இச்சூழலில் கடந்த ஜூலை 20ஆம் தேதி 35 வயது ரேகா வீட்டில் தொல்லை தந்து வந்த எலியைக் கொல்ல தக்காளியில் விஷம் வைத்துள்ளார்.
தொடர்ந்து டிவி பார்த்துக் கொண்டே தற்செயலாக அப்பெண் எலி மருந்து வைத்த விஷம் கலந்த தக்காளியை எடுத்து தான் சமைத்துக் கொண்டிருந்த மேகி நூடுல்ஸில் சேர்த்துள்ளார். தொடர்ந்து மேகி சமைத்து உண்ட அப்பெண்ணுக்கு சிறிது நேரத்தில் உடல்நிலை மோசமாகத் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க: Madhya Pradesh: ஒரே ஊசியில் 39 குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி... துறை தலைவரின் உத்தரவால் நர்சிங் மாணவர் செய்த கொடூரம்!
இதையடுத்து சதாப்தி மருத்துவமனைக்கு அப்பெண் அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் (ஜூலை.27) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து இவ்வழக்கை காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், முன்னதாக சந்தேகத்துக்கிடமாக இம்மரணத்தில் எதுவும் இல்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் பெண்ணின் கணவர், மைத்துனர் மீது எந்த சந்தேகமும் இல்லை என்றும், பெண்ணை யாரும் கொலை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பாரா மரண அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 100,000 நபர்களுக்கு 32.6 என்ற தேசிய சராசரியை விட அதிகமான எதிர்பாரா மரணங்கள் உள்ளன.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 3,74,397 எதிர்பாரா மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இதில் 35 விழுக்காட்டுக்கும் அதிகமான இறப்புகள் வாகன விபத்துக்களால் ஏற்படுகின்றன. எனினும், இது போன்ற நிகழ்வுகள் அலட்சியம் காரணமாக தமக்குத் தாமே தீங்கு விளைவித்து மரணம் அடையும் நிகழ்வுகள் மிகவும் அரிது.
மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!
உலகை மிரள வைத்த இலங்கை போராட்டம்...முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஆளும் வர்க்கம்...பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்