மேலும் அறிய

நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் ஜெயின் மதத்தவர்கள்...காரணம் என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அவர்களின் முக்கிய புனித தளமான சமத் ஷிகர்ஜியை சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உலகின் பழமைவாய்ந்த மதங்களில் ஒன்றாக சமணம் (ஜெயினம்) உள்ளது. கிறிஸ்துவுக்கு முன்பு 599 முதல் 527 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மகாவீரர் இந்த மதத்தை நிறுவியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 0.37 சதவிகித்தினர் சமணர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் சமணர் வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள சமணர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பேசு பொருளாக மாறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அவர்களின் முக்கிய புனித தளமான சமத் ஷிகர்ஜியை சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புனித தலத்தின் புனிதம் கெட்டுவிடுமோ என அச்சம் கொண்டுள்ள அவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இம்மாதிரியாக போராட்டம் அறிவிப்பது புதிது இல்லை என்றாலும், சுற்றுலா தலத்தின் பட்டியலை மாற்றி அமைப்பது குறித்து மாநில அரசை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

கிர்டி மாவட்டத்தில் உள்ள பரஸ்நாத் மலையின் உச்சியில் சம்மேட் ஷிகர்ஜி புனித தலம் அமைந்துள்ளது. சமணர்களின் முக்கிய பிரிவான திகம்பர் மற்றும் ஸ்வேதாம்பர் ஆகியோர் இந்த இடத்தை முக்கிய புனித தலமாக கருதுகின்றனர்.

இந்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசுதான் என ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறுகையில், "நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். இந்த விஷயத்தை சரியாக ஆராய்ந்த பிறகு முடிவெடுப்போம். இந்த விஷயத்தை நான் இன்னும் விரிவாக ஆராயவில்லை. ஆனால், இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது" என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பரஸ்நாத் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் அறிவித்தது. அப்போதைய மாநில பாஜக அரசு அளித்த திட்டத்தின்படி, சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

அந்த சமயத்தில், ஏதேனும் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால் தற்போது அந்த முடிவு திருத்தப்பட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உண்ணாவிரதம் இருந்த சமண துறவி முனி சுக்யேய சாகர் செவ்வாய்க்கிழமை இறந்ததை அடுத்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

மும்பையைத் தவிர, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானின் பல நகரங்களிலும், தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget