பறவைகளின் தாகத்தை தீர்க்க மரங்களில் `வாட்டர் பாயிண்டுகள்'
கர்நாடக மாநிலத்தில் பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மரங்களில் வாட்டர் பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்க உள்ளதால், நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில, கர்நாடக மாநிலத்தில் உள்ள கலாபுரகி நகராட்சி பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்கு புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கலாபுரகி நகராட்சி சார்பில் பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் உள்ள மரங்களில் சிறு தட்டுகளில் தண்ணீர் ஊற்றி வைக்கப்படுகிறது. இந்த தண்ணீர் பறவைகளின் தாகத்தை தீர்க்க உதவுகிறது.

Karnataka: Kalaburagi City Corporation installed water points for birds amid rising temperature

"We've made water points for birds in gardens. We'll install water points at bus & railway stations for people to get free water," said Kalaburagi City Corporation Commissioner(29.03) pic.twitter.com/L2vMb3piwK
— ANI (@ANI) March 29, 2021

கலாபுரகி நகராட்சி ஆணையர் சிநேகல் லோகண்டே இதுபற்றி கூறும்போது, வெயில் அதிகமாக இருப்பதால் பறவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், பறவைகள் அதிகளவில் கூடும் தோட்டங்களில் இதை ஒரு சிறு முயற்சியாக முன்னெடுக்கிறோம் என்றார். இதுதவிர, அந்த நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக தண்ணீர் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.