Watch Video : அடிக்கல் நாட்டு விழாவில் ஜே.சி.பி. ஓட்டிய மத்திய ரயில்வே அமைச்சர்..! வைரலாகும் வீடியோ..
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அடிக்கல் நாட்டு விழாவில் ஜே.சி.பி. ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய ரயில்வே அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் அஸ்வினி வைஷ்ணவ். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஜல்னா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பிட் லைன் மற்றும் கோச் பராமரிப்பு வசதிக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அடிக்கல் நாட்டினார்,
அடிக்கல் நாட்டு விழா நிறைவு பெற்ற பிறகு, அங்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், அங்கே இருந்த ஜே.சி.பி.யை ஓட்டிப் பார்க்க மத்திய அமைச்சருக்கு ஆர்வம் வந்தது. இதையடுத்து, அவர் அங்கிருந்த ஜே.சி.பி.யை ஓட்டிப் பார்த்தார்.
Laid the foundation stone of pit line & coach maintenance facility in Jalna. pic.twitter.com/81JOt30Yjd
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 3, 2022
கட்டுமான பணிகளின்போது தலைக்கு அணியும் பாதுகாப்பு ஹெல்மெட்டை அணிந்து கொண்டு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜே.சி.பி. மீது ஏறி, ஜே.சி.பி.யை இயக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவரே தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ஜே.சி.பி. ஓட்டுனர் எவ்வாறு ஜே.சி.பி.யை இயக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அடிக்கல் நாட்டு பணியின்போது என்று குறிப்பிட்டு மத்திய அமைச்சர் இதை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் ஏராளமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஜல்னா மாவட்டத்தில் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பிட்லைன் சுமார் 30 கோடியில் கட்டப்பட உள்ளது. இதுதவிர, ஜல்னா மாவட்டத்திலே பெட்டிகளை பராமரிக்கும் தொழிற்சாலைகள் கட்டப்பட உள்ளது. இதன் மொத்த மதிப்பு 92 கோடி ஆகும்.
பிட்லைன் என்பது ரயில்களின் கேரேஜ் பாகங்களுக்கு பராமரிப்பு மேற்கொள்ளும் இடம் ஆகும். ரயில்களின் பெட்டிகளை தயார்படுத்துவதற்கும், சுத்தம் செய்வதும் பிட்லைனில் நடைபெறுகிறது.
மேலும் படிக்க : நடனமாடிக்கொண்டிருந்த மகன் உயிரிழப்பு.. அதிர்ச்சி 66 வயது தந்தையும் மரணம்.. ஒரு ஷாக் சம்பவம்..
மேலும் படிக்க : Mangalyaan: செவ்வாய்க்கோளை சுற்றிவந்த இந்தியாவின் பெருமிதம் மங்கள்யான் செயலிழப்பு; இஸ்ரோ சொன்ன அதிர்ச்சி தகவல்..