Viral video: கோவில் எதற்கு..தெய்வங்கள் எதற்கு.. இன்று உங்களை நெகிழவைக்கும் அப்பா-மகள் வீடியோ
தந்தை ஒருவரும் அவரது பெண் குழந்தையும் ஒருவருக்கொருவர் அன்பையும் உணவையும் பரிமாறிக் கொள்ளும் காட்சி வெளியாகி நெட்டிசன்களின் மனங்களை குளிர்வித்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஒருபுறம் செல்லப்பிராணிகளும் மிருகங்களும் ட்ரெண்டாகி வரும் நிலையில், மற்றொருபுறம் எளிய மனிதர்களும் அவர்களின் அன்பு ததும்பும் வீடியோக்களும் காண்போர் மனதை இலகுவாக்கி அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முன்னதாக மும்பை உள்ளூர் ரயிலில் தந்தை ஒருவரும் அவரது பெண் குழந்தையும் ஒருவருக்கொருவர் அன்பையும் உணவையும் பரிமாறிக் கொள்ளும் காட்சி வெளியாகி நெட்டிசன்களின் மனங்களை குளிர்வித்துள்ளது.
நகரத்தின் வெறுமைக்கு மத்தியிலும் வறுமையின்பிடியிலும் சிக்கியிருப்பவர் போன்றும் தோற்றமளுக்கும் அத்தந்தையும் குழந்தையும் ஒருவருக்கொருவர் பழங்கள் ஊட்டி தூய்மையான அன்பை வெளிப்படுத்தும் இந்தக் காட்சி இணையவாசிகளை உணர்ச்சிக் குவியலுக்கு ஆளாக்கியுள்ளது.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் 4.21 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ள இந்த வீடியோவில் இன்ஸ்டாவாசிகள் உணர்வுக்குவியலாய் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Soumya Swaminathan : குரங்கு அம்மை ஒரு அலாரம்போல.. தயார் நிலையில் இருந்தே ஆகணும்.. WHO தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்..
திடீரென தோன்றி மறையும் பேய் கால்தடங்கள்? 12 ஆயிரம் வருட மர்மத்தை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்