King Saraboji : தஞ்சை சரஸ்வதி மஹாலில் திருடப்பட்ட சரபோஜி மன்னரின் ஓவியம்.. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதா?
தஞ்சை சரஸ்வதி மஹாலில் திருடப்பட்ட சரபோஜி மன்னரின் ஓவியம் அமெரிக்காவில் கண்பிடிக்கப்பட்டுள்ளது
சரபோஜி மன்னர் ஓவியம்
தஞ்சை சரஸ்வதி மஹாலில் திருடப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவரது மகன் சிவாஜியின் ஓவியம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலம் சரபோஜி மன்னர் ஓவியம் விற்பனை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.
போலி ஆவணம்:
கடந்த 2006 ஆம் ஆண்டு போலி ஆவணம் மூலம் சரபோஜி மன்னர் ஓவியம் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதையடுத்து போலி ஆவணம் மூலம் மன்னர்களின் ஓவியம் வாங்கப்பட்டதையறிந்த, அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்தனர். இந்நிலையில் தஞ்சை சரபோஜி மன்னர், அவரது மகன் சிவாஜியின் ஓவியம் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை:
தற்போது, தஞ்சை சரஸ்வதி மஹாலிலிருந்து, ஓவியங்கள் திருடப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அங்கிருக்கும் ஓவியங்களை, இந்தியா கொண்டு வருவதற்கான வேலையை சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இதே போன்று சில தினங்களுக்கு முன், தஞ்சாவூரிலுள்ள நூலகத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பைபிள் கடந்த 2005-ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த பைபிள் எங்கு இருக்கிறது என்பது தொடர்பாக தேடப்பட்டு வந்தது. பின் அது லண்டனில் இருப்பது கண்டுபிடிக்க்கபட்டது.
#JUSTIN | தஞ்சையில் காணபோன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு https://t.co/wupaoCQKa2 | #Tanjore #Bible #TNPolice pic.twitter.com/x6Qm1oKGRR
— ABP Nadu (@abpnadu) July 1, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
View this post on Instagram
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்