Viral Video: மணக்கோலத்தில் கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்புடன் தேர்வெழுதிய மாணவி - வைரல் வீடியோ
மணக்கோலத்தில் கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்புடன் செய்முறைத் தேர்வு மேற்கொண்ட மாணவியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Viral Video: மணக்கோலத்தில் கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்புடன் தேர்வெழுதிய மாணவி - வைரல் வீடியோ Video: Bride Attends Practical Exam Wearing Lab Coat And Stethoscope Over Wedding Saree Viral Video: மணக்கோலத்தில் கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்புடன் தேர்வெழுதிய மாணவி - வைரல் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/009852751c967b3295a5f3d731368af01676217355693109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மணக்கோலத்தில் கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்புடன் செய்முறைத் தேர்வு மேற்கொண்ட மாணவியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மாணவி ஒருவர் மணக்கோலத்தில் இருக்கிறார். முகத்தில் புன்னகை. கழுத்தில் ஸ்டெதஸ்கோப், பட்டுச் சேலையின் மீது லேப் கோட் போட்டுக்கொண்டு செய்முறைத் தேர்வை மேற்கொள்கிறார். அந்த வீடியோ இதுவரை 1,53,000 லைக்குகள், 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து இன்ஸ்டாகிராமில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
யார் அந்த மணப்பெண்?
அந்த வீடியோவில் இருப்பது கேரள மாநிலம் பெத்தனி நவ்ஜீவன் பிஸியோதெரபி கல்லூரியின் மாணவர் ஸ்ரீ லக்ஷ்மி என்பது தெரிகிறது. பரீட்சை அறைக்குள் அவர் நுழையும்போது அவரது வகுப்புத் தோழிகள் உற்சாகமாக வரவேற்கின்றனர். மஞ்சள் நிற பட்டுச் சேலை, தகிக்கும் தங்க நகைகள் என்று ஜொலிக்கிறார்.
வீடியோவை ஸ்ரீ லக்ஷ்மி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், “மருத்துவப் பணியாளர்களின் வாழ்க்கை. பிஸியோதெரபி தேர்வும், திருமணமும் ஒரே நாளில்” என்று கேப்ஷன் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணக் கோலத்தில் தேர்தலில் வாக்களித்தவர்கள். திருமணக் கோலத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்கள் என இதற்கு முன்னரும் சமூக வலைதளம் பல்வேறு சுவாரஸ்யப் பதிவுகளை நமக்குத் தந்துள்ளது.
வீடியோவைக் காண:
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
ஸ்ரீலக்ஷ்மி இந்த வீடியோ வெளியாவதற்கு முன்னரும் கூட இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோவர்ஸ் கொண்டவராகத் தான் இருந்துள்ளார். குறும்புப் பெண்ணாக, நன்றாக நடனமாடக் கூடியவராக இருக்கிறார். அவரது மணக்கோல வீடியோ வைரலான நிலையில் அவரது இன்ஸ்டா பேஜுக்கு இன்னும் மவுசு அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)