UP Train Derail: உத்தர பிரதேசத்தில் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..4 பேர் உயிரிழப்பு
Uttar Pradesh Train Derail: உத்தர பிரதேச மாநிலத்தில் சண்டிகர் - திப்ரூகர் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் பயணிகளை மீட்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் முழுமையாக ரயில் சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது.
VIDEO | Visuals of Dibrugarh Express, whose bogies derailed near Gonda railway station in UP. pic.twitter.com/jQaQs3uoj6
— Press Trust of India (@PTI_News) July 18, 2024
முதலமைச்சர் உத்தரவு:
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath takes cognisance of the train accident in the Gonda district. He directs the officials to reach the spot immediately and expedite the relief work; gives instructions for proper treatment of the injured: CMO
— ANI (@ANI) July 18, 2024
(file pic) https://t.co/ggCTJKwmq3 pic.twitter.com/FxmUZqzTqH
இந்த சம்பவம் குறித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகளுக்கு அறிவிறுத்தல்களை வழங்குயுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு, அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே நிர்வாகம்:
இச்சம்பவம் குறித்து, வடகிழக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ பங்கஜ் சிங் கூறுகையில், " இந்த விபத்தானது மதியம் 2.37 மணியளவில் நடந்தது. முதற்கட்ட தகவலின்படி, 4 முதல் 5 பெட்டிகள் வரை தடம் புரண்டன. ரயில்வேயின் மருத்துவ வாகனமானது சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியை துவங்கியுள்ளது. மேலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், மீட்பு பணியானது, அங்கு தீவீரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது, இந்திய ரயில்வே. மேலும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு, ரூ. 50, 000 வழங்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.