(Source: ECI/ABP News/ABP Majha)
உ.பியில் வெளுத்து வாங்கிய கனமழை; மின்னல் தாக்கியதில் 38 பேர் பலியான பெரும் சோகம்..!
UP Rain Lightning :உத்தர பிரதேச மாநிலத்தில் கனமழையுடன் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உள்ளிட்ட 38 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கனமழைக்கு மத்தியில் மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கியதில் வாரணாசி ,பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழையுடன் மின்னல்:
நேற்று ( ஜூலை 11 ) உத்தர பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கையானது முடங்கியது, மழையுடன் இடியும் மின்னலும் சேர்ந்தது. இந்நிலையில், அங்கு மின்னல் தாக்கியதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
- சந்தௌலியில், 13 மற்றும் 15 வயதுடைய இரண்டு பதின்ம வயதினர் உட்பட, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மீன்பிடிக்கும்போது மின்னல் தாக்கியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
- சுல்தான்பூரில் கொல்லப்பட்ட ஏழு பேரில், மூன்று குழந்தைகள். நெல் பயிரிடும் போதும், மாம்பழம் பறிக்கும் போதும், தண்ணீர் எடுக்கும் போதும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
- அவுரை பகுதியில், மழை பெய்து கொண்டிருந்த போது மாமரத்தின் அடியில் தஞ்சமடைந்த 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே தனது குடும்ப உறுப்பினர்கள் இருந்த பண்ணை வயல் நோக்கி நடந்து சென்ற 5 வயது சிறுமி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
- வாரணாசியில் இரண்டு சகோதரர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர், அவர்களில் ஒருவர் தீக்காயங்களுடன் உயிரிழந்தார், மற்றவர் சிகிச்சை பெற்று வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக பிரதாப்கரில் 11 பேரும், சுல்தான்பூரில் ஏழு இறப்புகளும்,
- சந்தௌலியில் ஆறு பேரும், மெயின்புரியில் ஐந்து பேரும், பிரயாக்ராஜில் நான்கு பேரும், அவுரியா, தியோரியா, ஹத்ராஸ், வாரணாசி மற்றும் சித்தார்த்நகரில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக பிரதாப்கரில் 11 பேரும், சுல்தான்பூரில் ஏழு இறப்புகளும், சந்தௌலியில் ஆறு பேரும், மெயின்புரியில் ஐந்து பேரும், பிரயாக்ராஜில் நான்கு பேரும், அவுரியா, தியோரியா, ஹத்ராஸ், வாரணாசி மற்றும் சித்தார்த்நகரில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மழை பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் காணும் , முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath conducts an aerial survey of flood-affected areas in Lakhimpur Kheri. pic.twitter.com/YrnTwtjYug
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 10, 2024
இந்நிலையில், இயற்கை நிகழ்வுகளால் பலர் உயிரிழந்த சம்பவமானது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: Rahul Gandhi: மணிப்பூர் போங்க; பிரச்சினைகளை கேளுங்க: பிரதமருக்காக வீடியோ வெளியிட்ட ராகுல்