UPI Transaction : யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை....வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்த என்பிசிஐ...!
ஆன்லைனில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை என்று வாடிக்கையாளர்களுக்கு என்பிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
UPI Transaction : ஆன்லைனில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை என்று வாடிக்கையாளர்களுக்கு என்பிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
பணப்பரிமாற்றம்
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட பண பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது.
சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆன்லைனில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் ரூ.2,000க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கட்டணம் இல்லை
இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பினர். இது பற்றி தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அதில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யுபிஐ மொபைல் வாலட் (ப்ரீபெய்டு பேமன்ட் இன்ஸ்ட்ருமென்ட்) மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000க்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இதை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது இல்லை. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
NPCI Press Release: UPI is free, fast, secure and seamless
— NPCI (@NPCI_NPCI) March 29, 2023
Every month, over 8 billion transactions are processed free for customers and merchants using bank-accounts@EconomicTimes @FinancialXpress @businessline @bsindia @livemint @moneycontrolcom @timesofindia @dilipasbe pic.twitter.com/VpsdUt5u7U
மேலும், மேலும், யுபிஐ பரிவர்த்தனைகளில் 99.9 சதவீதம் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தனி நபர், தனிநபர் வர்த்தகர், வங்கி-வங்கி கணக்கு பரிமாற்றம் உள்ளிட்ட சதாரண யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, போன்பே, கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (National payments corporation of india) தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தங்களது செயலியை பயன்படுத்து பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்று போன்பே தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க