ஒவ்வொரு சனிக்கிழமையும் இளைஞரை கடிக்கும் பாம்பு?! 40 நாளில் 7 முறை - என்ன சொல்றீங்க?
உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவரை ஒவ்வொரு சனிக்கிழமையும் பாம்பு கடிப்பதாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திரைப்படங்களில் பாம்புகள் குறிப்பிட்ட மனிதர்களை மட்டும் குறிவைத்து கடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படி ஏதும் நடப்பதற்கு சாத்தியம் இல்லை. ஆனால், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு பாம்பு கடி சம்பவம் பேசப்படுவது அனைவரையும் ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது.
40 நாட்களில் 7 முறை பாம்பு கடி:
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பெடாபூர். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் விகாஸ் துபே. இவருக்கு தற்போது 24 வயது ஆகிறது. இவரை சமீபநாட்களாக பாம்பு தொடர்ந்து கடித்து வருகிறது என அவர் சொல்கிறார். அதுவும் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் இவரை பாம்பு கடிக்கிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் இவரை 7 முறை பாம்பு கடித்துள்ளதாக அவர் ஆட்சியர் முன்பு வந்து கதறியழுதுள்ளார்
இதனால், பாம்பு கடிக்காக இவர் அடிக்கடி சிகிச்சைக்கு சென்று தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளார் என சொல்கிறார். இதுதொடர்பாக, பெடாபூர் தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன்கிரி, விகாஸ் துபே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பாம்பு கடி சிகிச்சைக்காக தான் ஏராளமான பணத்தை செலவிட்டுள்ளதாகவும், தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் உதவுமாறும் அழுதார். ”நான் அவரிடம் அரசு மருத்துவமனைக்குச் சென்று இலவசமாக பாம்பு கடிக்கு சிகிச்சை பெறுமாறு அறிவுரை கூறினேன்.
அதுமட்டுமின்றி, அவரை உண்மையில் கடித்தது பாம்புதானா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பற்றி விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு நபர் பாம்பு கடித்ததால், அந்த நபர் ஒவ்வொரு முறையும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரே நாளில் குணமடைவது விசித்திரமாக தெரிகிறது. இதுதொடர்பாக, விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உண்மை வெளியில் கொண்டுவரப்படும்”
என ஆட்சியர் கூறினார்.
அதிகாரிகள் குழு விசாரணை:
விகாஸ் துபேவை ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும்போது அவர் ஒரே மருத்துவமனைக்குச் சென்று, ஒரே நாளில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார். கடந்த 40 நாளில் இளைஞரை 7 முறை பாம்பு கடித்ததும், அதுவும் சனிக்கிழமை மட்டும் பாம்பு அவரை கடிப்பதாகச் சொல்லப்படுவதும் விநோதமாக இருப்பதால் அப்பகுதியில் அது பரபரப்பாக பேசப்படுகிறது.
உண்மையில் அந்த நபரை பாம்புதான் கடித்ததா? அல்லது வேறு ஏதேனும் கடித்ததா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: NEET UG Supreme Court: நீட் மறுதேர்வு தேவையற்றது - மத்திய அரசு.. இளநிலை மருத்துவ கலந்தாய்வு எப்போது தெரியுமா?
மேலும் படிக்க: Viral Video: "உங்க காலில் விழுகிறேன்.. வேலைய முடிங்க" ஐஏஎஸ் அதிகாரியிடம் கெஞ்சிய பீகார் முதல்வர் நிதிஷ்!