NEET UG Supreme Court: நீட் மறுதேர்வு தேவையற்றது - மத்திய அரசு.. இளநிலை மருத்துவ கலந்தாய்வு எப்போது தெரியுமா?
NEET UG Superme Court: நீட் மறுதேர்வு தேவையற்றது என, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
NEET UG Superme Court: இளநிலை மருத்துவ கலந்தாய்வு தேதி தொடர்பாகவும், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு வழக்கு:
இளநிலை மருத்து படிப்புகளுக்கான நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பித்துள்ளது. அதில், முடிவுகளின் விரிவான பகுப்பாய்வில் பெரிய அளவிலான முறைகேடு மற்றும் உள்ளூர் தேர்வாளர்கள் பயனடைந்ததற்கான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வு அவசியமில்லை - மத்திய அரசு:
பிரமாணப் பத்திரம் தொடர்பான தகவலின்படி, “மருத்துவ நுழைவுத் தேர்வை மறுதேர்வு நடத்த விரும்பவில்லை என்று மத்திய அரசும் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆதாரமற்ற சந்தேகங்களின் அடிப்படையில் மறுதேர்வு நடத்தினால், மே 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்வை எழுதிய கிட்டத்தட்ட 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
கலந்தாய்வு எப்போது?
வழக்கு விசாரணை காரணமாக மருத்து கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு சமர்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “ நீட் தேர்வு அடிப்படையிலான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்து நான்கு கட்டங்களாக தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் முறைகேட்டால்பயனடைந்ததாகக் கண்டறியப்பட்டால், அவர்களது கவுன்சிலிங் ஏதேனும் கலந்தாய்விற்கு பின்னரும் கூட ரத்து செய்யப்படும். முறைகேடு மற்றும் தாள் கசிவு காரணமாக மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சில மனுதாரர்கள் கோரிய நிலையில், சிலர் மறுதேர்வுக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர். இந்த சூழலில் தான் அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
விசாரணை தீவிரம்:
ஐஐடி மெட்ராஸின் வல்லுநர்கள் நீட்-யுஜி 2024 இன் தரவுகளின் தொழில்நுட்ப பகுப்பாய்வை மேற்கொண்டனர். அதன்படி, வெகுஜன முறைகேடுகள் அல்லது உள்ளூர்மயமாக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பயனடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், குறிப்பாக 550 முதல் 720 வரை, ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளதாகவும், நகரங்கள் மற்றும் மையங்களில் இந்த உயர்வு காணப்படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த அதிகரிப்புக்கு பாடத்திட்டத்தில் 25% குறைப்புக் காரணமாக இருக்கலாம் என்றும், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பரந்து விரிந்திருப்பது வெகுஜன முறைகேடுகளின் மிகக் குறைந்த சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டுவதாகவும் மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
சிபிஐ விசாரணை தேவையா?
சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைக்கு, எதிர்காலத் தேர்வுகளில் இதுபோன்ற கசிவுகள் அல்லது முறைகேடுகள் எதுவும் நடக்காமல் இருக்க, எழுப்பப்பட்ட அனைத்து சிக்கல்களையும் பரிசீலிக்க ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமிக்கலாம் என, மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.