Akhilesh Yadav : ”கனவில் வந்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், நானே ராம ராஜ்ஜியம் அமைப்பேன் என்றார்” - அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது கனவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்ததாகவும், ராமராஜ்யத்தை சமாஜ்வாதிதான் அமைக்க உள்ளதாக கூறியதாகவும் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.
நாட்டிலே அதிகளவு சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம். இந்த மாநிலத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளுங்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் தக்க வைப்பதற்கும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி ஆட்சியை பிடிப்பதற்கும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகின்றன.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறியிருப்பதாவது, “ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்னுடைய கனவில் தினமும் வருகிறார். அவர் நமது ஆட்சி அமையப் போகிறது. சமூகத்துவத்தின் ( சமாஜ்வாதி) பாதையிலே ராமராஜ்யம் நிறுவப்படும். சமூகத்துவம் என்று நிறுவப்படுகிறதோ, அப்போது மாநிலத்தில் ராமராஜ்யம் அமைக்ப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அகிலேஷ் யாதவ் கூறியிருப்பதாவது, யோகி ஆதித்யநாத் அரசு தோல்வியடைந்த அரசு. பா.ஜ.க.வில் பல மூத்த தலைவர்கள் தங்கள் ரத்தத்தாலும், வியர்வையாலும் பல ஆண்டுகளாக கட்சியை வலுப்படுத்தியிருந்தார்கள். கட்சிக்காக வியர்வை சிந்தியவர்கள் தாங்கள்தான் என்று சில சமயங்களில் சொல்கிறார்கள். ஆனால், ஆதித்யநாத் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
நாட்டிலே மிகப்பெரிய சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகள் உள்ளன. கொரோனா கால ஊரடங்கு, கொரோனா உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில காலமாக அந்த மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால், ஏபிபி- சி வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்பில் கூட யோகி ஆதித்யநாத் செல்வாக்கு சரிந்திருந்தது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ரிட்டர்ன் ஆகும் செக்... கடத்தலில் ஆம்பர் கிரீஸ் என்னும் திமிங்கல கழிவு.. தென் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய செய்திகள்
மேலும் படிக்க : Gold-Silver Rate, 4 jan : அதிரடிதான்..சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா...?
மேலும் படிக்க : Shelf life of Covaxin: காலாவதியான கோவாக்சின் தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டதா? மத்திய அரசு கூறுவது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்