Gold-Silver Rate, 4 jan : அதிரடிதான்..சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா...?
Gold-Silver Rate Today 17 Dec : சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் ரூபாய் 224 குறைந்து சவரன் ரூபாய் 36 ஆயிரத்து 136க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கம் 22 காரட் நேற்று ரூபாய் 4 ஆயிரத்து 545க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 360க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூபாய் 28 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 517க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 224 குறைந்து ரூபாய் 36 ஆயிரத்து 136-க்கு விற்கப்படுகிறது.
24 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 883க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 39 ஆயிரத்து 64க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 65.70க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 65 ஆயிரத்து 700க்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும்.

காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

