மேலும் அறிய

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக  கூறப்படுகிறது.

இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை ஒரே காலத்தில் நடத்த வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசின் அதிகாரம் முன்பு இல்லாதா அளவிற்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

அதேபோல், ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தாலோ அல்லது வேறு காரணங்களால் ஆட்சி நடத்த முடியாத சூழல் உருவாகினாலோ மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை காத்திருக்க வேண்டும்.  அதுவரை அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தான் நடைபெறும். 

இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ இதை எல்லாம் காதில் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த சட்டம் குறித்து கருத்துக்களை பெறுவதற்காகவும், அதை ஆய்வு செய்து தொகுத்து வழங்குவதற்காகவும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழு தனது விவரங்களை மத்திய அரசு முன்னிலையைில் தாக்கல் செய்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போது இருக்கும் ஒரே வேலை, அனைத்து மாநில அரசுகளையும் சமாதானப்படுத்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான். 

ஏனெனில் இந்த மசோதாவை நிறைவேற்ற அரசியலமைப்பு சட்டத்தில் 6 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த திருத்தங்களை செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3ல் 2 பங்கு பலம் மத்திய அரசுக்கு வேண்டும். தற்போது மத்திய அரசின் கூட்டணி பெரும்பான்மையோடு இருந்தாலும், இந்த பலத்துடன் இல்லை.

அதாவது மக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் 292 பேர் பாஜக கூட்டணியில் உள்ளனர். ஆனால் 3ல் 2 பங்கு பலத்தை பெற 364 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். மாநிலங்களவையில் 245 எம்பிக்களில் 112பேர் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் இது போதாது. 3ல் 2 பங்கு பலம் வேண்டும் எனில் குறைந்தபட்சம் 164 எம்பிக்களின் ஆதரவு தேவை. எனவேதான் அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் இந்த மசோதா அடுத்த வாரம் தாக்கல் ஆக இருக்கிறது. இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. அதே நேரம் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Embed widget