கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் வசதியற்ற கைவினைஞர்களால் அமைக்கப்பட்ட அரங்குகளுக்கு அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
மத்திய அரசின் ஆதரவுடன் வசதியற்ற கைவினைஞர்களால் அமைக்கப்பட்ட அரங்குகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற 43ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024 சுமார் 5.85 கோடி ரூபாய் நிகர விற்பனையை ஈட்டியது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி, பாரத மண்டபத்தில் அமைச்சக அரங்கைத் திறந்து வைத்தார்.
இதையும் படிக்க: Viduthalai: லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியது காமராஜரா? கருணாநிதியா? வெற்றி மாறனுக்கு ப்ளூசட்டை கேள்வி
ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்:
அஸ்ஸாம், சண்டிகர், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரக்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த வசதியற்ற கைவினை கலைஞர்கள், தங்களின் கைவினை பொருள்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.
Record sales of Rs. 5.85 crores at 43rd India International Trade Fair (IITF) 2024 by underprivileged artisans
— DD India (@DDIndialive) December 1, 2024
Participants from 18 States/UTs, including Assam, Chandigarh, Chhattisgarh, Delhi, Gujarat, Haryana, Himachal Pradesh, Jammu & Kashmir, Karnataka, Maharashtra, Madhya… pic.twitter.com/Hg6PwabPI0
ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், பிளாக் பிரிண்டிங், ஜரி பட்டு, சந்தேரி புடவைகள், செயற்கை நகைகள், தோல் பொருட்கள், எம்பிராய்டரி, காலணிகள், கம்பளிப் பொருட்கள், கையால் செய்யப்பட்ட பைகள், கரும்பு மற்றும் மூங்கில், ஊறுகாய், நம்கீன், அகர்பத்தி மற்றும் வாசனை திரவியங்கள், ராஜஸ்தானி மோஜ்ரி மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதையும் படிக்க: டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்!