மேலும் அறிய

டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 

கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கி, பயிர்க்கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்கள் நீரில் மூழ்கி அழுகி, வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. குறிப்பாக, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட காவிரிப்படுகை மாவட்டங்களில், 60 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் முற்றிலுமாக வெள்ளநீரில் மூழ்கி விவசாயிகளை மீள முடியாத பெருந்துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களும் தற்போதைய கன மழையால் பாதிப்படைந்துள்ளன.

நதிநீர் உரிமை மறுப்பாலும், ஆட்சியாளர்களின் பாராமுகத்தாலும் காலம் காலமாக இழப்பை மட்டுமே சந்தித்து நிற்கும் வேளாண் பெருங்குடி மக்கள், தற்காலத்தில் வேளாண்மை செய்வதே பெரும்பாடாகியுள்ளது. பாசன நீர் பற்றாக்குறை, பருவமழை பொய்ப்பு, இடுபொருட்கள் கிடைக்காமை, வேளாண் பணிகளுக்கு ஆட்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு தடைகளைக் கடந்து சம்பா பருவ சாகுபடிக்காகப் பயிரிடப்பட்ட விளைபொருட்கள் அனைத்தும், தற்போதைய கனமழை காரணமாக வீணாகியிருப்பதால் காவிரிப்படுகை விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

வறட்சி, புயல், வெள்ளம் எனத் தொடர்ச்சியான இயற்கைப் பேரிடர்களாலும், அரசுகளின் தவறான வேளாண் பொருளாதாரக் கொள்கைகளாலும் ஒவ்வொரு ஆண்டும் பெரும் இழப்புகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகும் தமிழ்நாட்டு விவசாயிகளின் தலையில் மேலும் ஒரு பேரிடியாகத் தற்போதைய வெள்ளச்சேதம் அமைந்துள்ளது. இத்தகைய துயர்மிகு சூழலிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து திமுக அரசு இதுவரை எவ்வித முறையான அறிவிப்பையும் வெளியிடாது அமைதி காப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

காவிரிப்படுகை மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி தலைசாய்ந்தும், நெல்மணிகள் அழுகியும், முளைப்புக் கட்டியும் வீணாகியுள்ளன. இவைத் தவிர, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நிலக்கடலை, எள், உளுந்து, துவரை, பாசிப்பயறு, கம்பு, சோளம், கேழ்வரகு, மிளகாய், சூரியகாந்தி உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் சேதமடைந்துள்ளன. தொடர் கனமழையால் பயிர்கள் மீது பல்வேறு நோய்த்தாக்குதல்களும் தொடங்கியுள்ளதால் வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இயற்கைச்சீற்றத்தால் வாழ்விழந்து நிற்கும் விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டியதும், எஞ்சியுள்ள வேளாண் பயிர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியதும் தமிழ்நாடு அரசின் தலையாயக் கடமையாகும்.

ஆகவே, கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கவேண்டுமெனவும், பயிர்க்கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். மேலும், பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து அடுத்தகட்ட வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பயிர்க்காப்பீட்டுத் தொகையினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | CongressAnna University Rape Issue | ”யார் அந்த சார்?”EA MALL-ல் நடந்தது என்ன? தமிழகத்தை அதிரவிடும் போஸ்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
IND vs AUS: பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி; டியர் டீம் இந்தியா! உங்களுக்கு இப்போது என்ன தேவை?
IND vs AUS: பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி; டியர் டீம் இந்தியா! உங்களுக்கு இப்போது என்ன தேவை?
Embed widget