மேலும் அறிய

Viduthalai: லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியது காமராஜரா? கருணாநிதியா? வெற்றி மாறனுக்கு ப்ளூசட்டை கேள்வி

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் தத்துவம் இல்லாத தலைவர் என்று வெற்றி மாறன் குறிப்பிட்டிருப்பது எம்.ஜி.ஆரையே என்று ப்ளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் வெற்றி மாறன். வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் 20ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலர் ரிலீசானது. அந்த ட்ரெயிலரின் முடிவில் தத்துவம் இல்லாத தலைவரால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும். வளர்ச்சிப் பாதையை இல்லை என்று ஒரு வசனம் வரும். அந்த வசனம் நடிகர் விஜய்யை குறிப்பிடுவதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், வெற்றி மாறன் தத்துவம் இல்லாத தலைவர் என்று குறிப்பிடுவது மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரை என்று ப்ளூசட்டை மாறன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தத்துவம் இலலாத தலைவர்:

விடுதலை 2. - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு, பாகம் 1: கதை நடக்கும் காலகட்டம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் என தெரிகிறது. ஈழ விடுதலை போராட்டத்தை வேறு வடிவில் எடுத்துள்ளாராம் வெற்றிமாறன். இதில் விஜயசேதுபதிக்கு பெருமாள் எனும் 'பிரபாகரன்' கேரக்டர். என்னை மாதிரி ஒருத்தன் தண்டவாளத்துல தலை வச்சி படுத்ததாலதான் உன்னை மாதிரி ஒருத்தன் படிச்சிட்டு வந்து இங்க உக்காந்துஇருக்க என ட்ரைலரில் இளவரசு பேசும் வசனம் யாரை குறிக்கிறது என்பது ஊருக்கே தெரியும்.

ஆனால் தமிழகத்தில் பல்லாயிரம் ஆரம்ப, உயர்நிலை பள்ளிகளை திறந்து, மதிய உணவிட்டு, லட்சக்கணக்கான முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கியவர் காமராஜர் என்பதை மறைக்கவோ, மறுக்கவோ இயலாது. இதை உங்கள் படத்தில் பதிவு செய்துள்ளீர்களா சார்?

“விடுதலை 2. - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு, பாகம் 2: கதை நடக்கும் காலகட்டம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் என தெரிகிறது. ஈழ விடுதலை போராட்டத்தை வேறு வடிவில் எடுத்துள்ளாராம் வெற்றிமாறன். இதில் விஜயசேதுபதிக்கு பெருமாள் எனும் 'பிரபாகரன்' கேரக்டர். தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும். அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது எனும் வசனம் வருகிறது. இது விஜய்யை குறிப்பதாக கூறினர்.

விடுதலை 2. - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு, பாகம் 2:

எம்.ஜி.ஆரை கேலி செய்த வெற்றி மாறன்:

ஆனால் உண்மை அதுவல்ல. அவரிடம் பல முரணான‌ கொள்கை தத்துவங்கள் உள்ளன. இந்த வசனம் எம்..ஜி.ஆரை கிண்டல் செய்கிறது. நமக்கு ஒரே கேள்விதான். உயர்வான தததுவங்களை கொண்டு மக்கள் விரோத ஆட்சி செய்யும் தலைவர்கள் உயர்ந்தவர்களா அல்லது தத்துவம் இல்லாவிட்டாலும்.. சொந்த உழைப்பில் சம்பாதித்த தனது சொத்துக்களை பிறருக்கு தானம் செய்தவர் உயர்ந்த தலைவரா? உங்கள் ஹீரோ பெருமாள்.. தன் மக்கள் விடுதலைக்கு போராடியபோது.. உதவிக்கரம் நீட்டியது எம்.ஜி.ஆர் என்பதை படத்தில் பதிவு செய்துள்ளீர்களா அல்லது மறைத்து விட்டீர்களா?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ப்ளூசட்டை மாறனின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. வெற்றி மாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில்  விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதில் மஞ்சுவாரியர் நாயகியாக நடித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget