Morning Headlines: ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி.. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines May 3: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உத்தரபிரதேசம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களாக யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இந்தநிலையில், இந்த கேள்விக்கு முடிவு கொண்டு வரும் நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லாலும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானியை எதிர்த்து கிஷோரி லால் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் படிக்க..
- இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் வெப்பநிலை.. இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்..
கடந்த 24 மணி நேரத்தில், கரூர் பரமத்தியில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து, ஈரோட்டில் 44 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 42.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 42 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 42 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் 42.2 டிகிரி செல்சியஸ், திருச்சி 42.7 டிகிரி செல்சியஸ், வேலூர் 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூரில் கடந்த இரண்டு நாட்களாக 44 டிகிரி செல்சியஸ் அதாவது 112 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. கொடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என்பதால் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..
- ”எங்க அப்பா பெற்ற வாரிசு உரிமை இதுதான்” : பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு பிரியங்கா பதிலடி
தங்களது குடும்பத்தினர் செய்த தியாகத்தை பிரதமர் மோடி புரிந்து கொள்ள மாட்டார் என்று, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு தனது தாயிடமிருந்து பெற்ற சொத்துக்கு வரி விதிக்கப்படக்கூடாது என்பதற்காக, வாரிசு வரியை ரத்து செய்தார் என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மீண்டும் வாரிசு வரி விதிக்க திட்டமிட்டு வருவதாகவும் தொடர்ந்து சாடி வருகிறார். இந்நிலையில் மொரேனாவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,மேலும் படிக்க..
- சிஏஏ அடிப்படையில் இந்த மாதம் முதல் குடியுரிமை வழங்கப்படும் - அமித்ஷா பேச்சு
நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு என ஒரு எம்பி இருக்கும் வரை, ஆர்டிகள் 370 திரும்ப கொண்டு வரப்படாது என அமித் ஷா தெரிவித்துள்ளார். நியூஸ் 18 நெட்வொர்க்கிற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசினார். அதன்படி, ”எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வர மாட்டார்கள் அல்லது 370 வது பிரிவு மீண்டும் வர முடியாது. அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் அல்லது குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவர்களால் ரத்து செய்ய முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு என கடைசியாக ஒரு எம்.பி., இருக்கும் வரையில், சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப கொண்டுவர முடியாது. மேலும் படிக்க..