Morning Headlines: அச்சுறுத்தும் புதுவகை கொரோனா.. தென்மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. இன்றைய முக்கிய செய்திகள்
Morning Headlines: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- அச்சுறுத்தும் புது ஜேஎன் 1 கொரோனா! இந்தியாவில் 21 பேர் பாதிப்பு - பதற்றத்தில் 3 மாநிலங்கள்!
கடந்த சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால், அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, கேரளாவில் JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. JN.1 வகை கொரோனாவால் கோவாவில் மட்டும் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ஒருவரும் கேரளாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க
- தென்மாவட்டங்களில் பெருவெள்ளம், தத்தளிக்கும் தூத்துக்குடி..! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நேற்று, சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார். இதற்காக இன்று காலை 10.15 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார். மேலும் படிக்க
- மேலும் இரண்டு எம்.பிக்கள் இடைநீக்கம்.. கடும் அதிருப்தியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து 2 பேர் நுழைந்தனர். இது தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் போராட்டம் நடத்தியதால் எதிர்க்கட்சியை சேர்ந்த 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க
- பொன்முடிக்கு சிறை? அமைச்சர் பதவி தப்புமா? சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தண்டனையை அறிவிக்கும் உயர்நீதிமன்றம்
தமிழக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை, தாமாக முன்வந்து விசாரித்த சென்னை நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என கடந்த 19ம் தேதி அறிவித்தது. மேலும் படிக்க
- 'பெங்களூருக்கு ஐபிஎல் கப் வாங்கி கொடுங்க’ - அழைப்பு விடுத்த ரசிகருக்கு தோனி சொன்ன ‘நச்’ பதில்..!
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி கோப்பையை வென்று தருமாறு கோரிக்கை விடுத்த பெங்களூரு அணி ரசிகர்களுக்கு தோனி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பதிலளித்த தோனி, “பெங்களூரு அணி மிகவும் நல்ல அணி. இங்கு நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில், எல்லாமே திட்டமிட்டபடி நடக்காது” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க