மேலும் அறிய

Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ

Kanguva Review in Tamil : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா(Kanguva) திரைப்படம் இன்று உலகெங்கிலும் வெளியாகியுள்ளது. பாபி தியோல் , திஷா பதானி , யோகி பாபு  உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பான் இந்திய வெற்றி , 2000 கோடி வசூல் , மதம் புடிச்ச யானை , தமிழ் சினிமாவின் அடையாளம் என கடந்த சில மாதங்களாக கங்குவா படத்திற்கு பில்டப் கொடுத்தார்கள் படக்குழுவினர். கொடுத்த பில்டப்பிற்கு கங்குவா படம் வொர்த்தா இல்லையா என்பதை இந்த விமர்சனத்தில்(Kanguva Review) தெரிந்துகொள்ளுங்கள்.

கங்குவா கதை

இந்திய ரஷ்ய எல்லையில் மருத்துவ ஆய்வகத்தில்  ரகசியமாக குழந்தைகளை வைத்து ஆராய்ச்சி ஒன்று நடக்கிறது. இந்த ஆய்வகத்தில்  ஜீடா என்கிற ஒரு சிறுவன் தப்பி கோவாவிற்குச் செல்கிறான். 

காவல்துறையால் தேடப்படும் குற்றவாளிகளை பிடித்து தரும் பவுண்டி ஹண்டர்களாக  ஸ்டைலான என்ட்ரி கொடுக்கிறார்கள் சூர்யாவும் திஷா பதானியும். இவர்களுடன் காமெடி என்கிற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள் ரெடின் கிங்ஸ்லி மற்றும் யோகி பாபு.  ஆய்வகத்தில் இருந்து தப்பிச் சென்ற சிறுவன் பிரான்சிஸ் இடம் சேர்கிறான்.

நிகழ்காலத்தில் ஒரு கதை நடக்க இன்னொரு பக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடர்கிறது கங்குவாவின் கதை.

இந்தியாவில் படையெடுக்க முடிவு செய்யும் ரோமானியர்கள் தங்கள் படைகள் ஓய்வெடுக்க ஐந்தீவை தேர்ந்தெடுக்கிறார்கள்  பெருமாச்சி , அரத்தி , வெண்காடு , மண்டைக்காடு ,   என ஐந்து இனமக்கள் வாழ்ந்து வரும் தீவு ஐந்தீவு. பெருமாச்சி தீவில் வசிக்கும் மக்களை கொன்று நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிடும் ரோமானியர்கள் அரத்தி இனத்தின் தலைவனான உதிரன் ( பாபி தியோல்) உதவியை நாடுகிறார்கள். இவர்களுக்கு பெருமாச்சி இனத்தைச் சேர்ந்த கொடுவன் ( நட்டி) உதவி செய்வதால் அவனுக்கு பெருமாச்சி மக்கள் தண்டனை வழங்குகிறார்கள். அவனுடன் அவனது மகனையும் சேர்த்து கொல்லவேண்டும் என்கிற பெருமாச்சி மக்க்களின் முடிவுக்கு எதிராக நிற்கிறான் கங்குவா. பெருமாச்சியின் இளவரசனான கங்குவா ( சூர்யா) தன் இனத்தை எதிரிகளிடம் இருந்து காத்து கொடுவனின் மகனாக காப்பாற்றுவதே கங்குவா படத்தின் கதை.

கங்குவா விமர்சனம்

நிகழ்காலத்தில் வரும் பிரான்சிஸ் சூர்யாவின் காட்சிகளில் வைப் செய்ய வைக்கிறேன் என்கிற பெயரில் கடுப்பேற்றியிருக்கிறார் சிறுத்தை சிவா. சூர்யா திஷா பதானி , யோகி பாபு என அனைவரின்  ஓவர் ஆக்டிங்கை சகிக்க முடியவில்லை.

தப்பியோடி வரும் சிறுவனுக்கும் சூர்யாவுக்கு என்ன தொடர்பு என எந்த வித தெளிவுமில்லாமல் 1000 ஆண்டு கடந்த காலத்திற்கு தாவுகிறது படம்.

நிகழ்கால காட்சிகளைவிட கடந்த கால காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவரும் படியாக அமைந்துள்ளன என்றாலும் வசனம் முதல் திரைக்கதை வரை குழப்பி அடித்து வைத்திருக்கிறார் இயக்குநர். 

கொஞ்ச நேரம் உரைநடைத் தமிழிலும் கொஞ்ச நேரம் பேச்சுத் தமிழிலும் அமைந்த வசனங்கள் குளறுபடியின் உச்சம். மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து போர் காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரு சண்டைக் காட்சியிலும் கண்டினியுட்டி சிங் ஆகவில்லை.  முதலையுடன் சண்டை, நடுக்கடலில் சண்டை , பெண்களின் வீரத்தை நிரூபிக்க ஒரு தனிச்சண்டை காட்சி என படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் தலைவிரித்தாடுகின்றன. 

நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் லாஜிக்கே இல்லாமல் இணைத்தது மட்டுமில்லாமல் கார்த்தியை கேமியோ செய்ய வைத்து இரண்டாம் பகுதிக்கு லீட் வேறு கொடுத்திருக்கிறார்கள்.

படத்தை ஓரளவிற்கு உயிரோட்டமாக வைத்திருக்கும் ஒரு அம்சம் என்றால் தேவிஸ்ரீ பிரசாதின் இசை தான். ஒளிப்பதிவாளர் வெற்றி படத்திற்கு ஒரு தனி டோன் செட் செய்திருக்கிறார் என்றாலும் படத்தொகுப்பு காட்சிகளை கோர்வையாக வழங்குவதில் கோட்டை விட்டிருக்கிறது. 

படத்தின் ப்ரோடக்‌ஷன் டிசைனர் மிலன் மற்றும் அவர் மனைவிக்கு தனி பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். சின்ன சின்ன பொருட்கள் முதல் ஆயுதங்கள் , கிராமம் என ஒரு முழு உலகத்தை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டிற்கு நியாயம் சேர்க்கும் வகையில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைந்திருக்கின்றன

நடிப்பு

பல்வேறு கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தாலும் சூர்யாவைத் தவிர எந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.அதிலும் நிகழ்காலத்தில் வரும் பிரான்சிஸ் கதாபாத்திரத்தை வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக சூர்யாவின் பிளஸை எல்லாம் மைனஸாக மாற்றிவிட்டார்கள். எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றே தெரியாதபடி திஷா பதானி தமிழ் பேசுகிறார். ரெடின் கிங்ஸ்லி இனிமேல் நெல்சன் படங்களில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது.பாபி தியோலின் தோற்றம் செம வெயிட்டாக இருந்தாலும் அவர் செட் பீஸாக மட்டுமே  பயண்படுத்தப்பட்டிருக்கிறார். சொகுசாக நாற்காலியில் உட்கார்ந்து ஆட்களை ஏவிவிடும் வில்லன் டெம்பிளெட்டை மாற்றி புதிதாக முயற்சித்திருக்கலாம்.

ஒரு சிறுவனுக்கு கொடுத்த சத்தியத்தை காக்க முடியாத தலைவன் அந்த சத்தியத்தை நிறைவேற்ற மறுபிறப்பு எடுக்கிறான். இந்த பிறப்பிலாவது தனது சத்தியத்தை அவன் காப்பாற்றினானா என்பதே படத்தின் ஒன்லைன். ஆனால் அந்த அடிப்படை எமோஷனுக்காக காட்சிகளை உருவாக்காமல் பாகுபலி , கே.ஜி.எஃப் என எல்லா படங்களையும் மிஞ்ச வேண்டும் என்பதற்காக  சைன்ஸ் ஃபிக்‌ஷன் , ஃபேண்டஸி என கலந்து கட்டி எடுத்து மூச்சுத்திணற வைத்திருக்கிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva Review : களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review : களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
டாஸ்மாக்கில் இனி  ‘நோ எக்ஸ்ட்ரா பைசா’...இன்று முதல் இது கிடையாது.. மதுபிரியர்களே என்ஜாய்
டாஸ்மாக்கில் இனி ‘நோ எக்ஸ்ட்ரா பைசா’...இன்று முதல் இது கிடையாது.. மதுபிரியர்களே என்ஜாய்
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கும்மிடிப்பூண்டி TO வேளச்சேரி ரயில் சேவை - எப்போது தெரியுமா..?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கும்மிடிப்பூண்டி TO வேளச்சேரி ரயில் சேவை - எப்போது தெரியுமா..?
Kanguva: திரைக்கு வந்த கங்குவா! சமூக வலைதளங்களில் வன்மமும், வரவேற்பும் - இதே வேலையா போச்சு!
Kanguva: திரைக்கு வந்த கங்குவா! சமூக வலைதளங்களில் வன்மமும், வரவேற்பும் - இதே வேலையா போச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva Review : களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review : களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
டாஸ்மாக்கில் இனி  ‘நோ எக்ஸ்ட்ரா பைசா’...இன்று முதல் இது கிடையாது.. மதுபிரியர்களே என்ஜாய்
டாஸ்மாக்கில் இனி ‘நோ எக்ஸ்ட்ரா பைசா’...இன்று முதல் இது கிடையாது.. மதுபிரியர்களே என்ஜாய்
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கும்மிடிப்பூண்டி TO வேளச்சேரி ரயில் சேவை - எப்போது தெரியுமா..?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கும்மிடிப்பூண்டி TO வேளச்சேரி ரயில் சேவை - எப்போது தெரியுமா..?
Kanguva: திரைக்கு வந்த கங்குவா! சமூக வலைதளங்களில் வன்மமும், வரவேற்பும் - இதே வேலையா போச்சு!
Kanguva: திரைக்கு வந்த கங்குவா! சமூக வலைதளங்களில் வன்மமும், வரவேற்பும் - இதே வேலையா போச்சு!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
Ramandeep Singh: அடிச்சா சிக்ஸரு! இந்திய கிரிக்கெட்டின் புது ஸ்டார் ராமன்தீப் சிங்கா?
Ramandeep Singh: அடிச்சா சிக்ஸரு! இந்திய கிரிக்கெட்டின் புது ஸ்டார் ராமன்தீப் சிங்கா?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Embed widget